பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்குட்டுவன் போர்ச்செயல், அவனுக்குப் பேரும் புகழும் பயப்பதாம் என்ருலும், அதல்ை, அவன் படை புகுந்த நாட்டின் மக்களும் மாக்களும் படும் அல்லல், சொல்லித் தொலையாதாம். ஆதலின் அவன் போர் வேட்கையைத் தணிவிக்க விரும்பினர் புலவர். விரும்பியபுலவர், போர் பற்றிய நினைப்பே நிலைத்து நிற்கும் நெஞ்சினய்ைக் காட்சி தரும் செங்குட்டுவன்பால் சென்று, வறிதே போர் ஒழிக’ என்று கூறினால், அச்சொல் அவன் காதுகளுள்சென்று புகாது. மேலும், அதுகேட்கும் அவன், போரில் யான் பெறும் புகழ் கண்டு போற்றி, மேலும் மேலும் போர்க்களம் புகுந்து மேலும் மேலும் புகழ் பெருக்குவாயாக!' எனப் போற்ற வேண்டியவர் புலவர்கள். அவர்கள் அதுவிடுத்து, போர்க் களம் புகன்மின் என்கின்றனர் என்றால், அவர்களுக்கு யான் புகழ்பெறுவதில் விருப்பில்லேபோலும்’ என்ற எண்ணம் உடையணுகித், தம்மை வெறுத்து ஒதுக்குவதும் கூடும் என அஞ்சினர். அதல்ை, அறிவுரை கூறும் நிலையில், புலவர் பெரிதும் விழிப்புடையவராகி, தன்நலம் பேணும் தகவுரையே தருகின்றனர் புலவர், என அவன் எண்ணும் வகையில், வேந்தே! யாம் வாழ வேண்டின் நீ வாழ்தல் வேண்டும் ; நீ வாழவேண்டின், நின் இருதாள்களும் நோயின்றி நெடிது வாழ வேண்டும். மேலும் நின் தாள்கள், ஏனையோர் தாள்கள் போன்றன அல்ல, களம்பல பு கு ந் து கணக்கிலாப்புகழ் கொண்ட பெருமையுடைய , அவை, ஒயாது போர்க்களம் புகுந்து அலைந்தால், சிறிதே தளர்ந்து நோயுறுதலும் உண்ட்ாம். அது நினைக்க நடுங்குகிறது எம் நெஞ்சம்.

அவை, சிறிது காலமேலும் அவ்வருத்தம் ஒழிந்து, அமைதி வாழ்வு வாழ, வழி வகுக்கும் வேட்கை, நின் உள்ளத்தில் எழுத்திலதோ ? அவ்வேட்கை எழ வேண்டுகிருேம் யாம்' என்று கூறிப் போர்போக்கும் பொன்னுரைகளைப் பொருந்தக்

கூறி முடித்தார்.

24

منذ .