பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறந்து வீழ்ந்த வீரர்களுடையவும், வெங்கரிகள் உடையவும், பாயும் பரிகளுடையவுமாகிய உடல்களிலிருந்து ஊற்றெடுத்துப் பாயும் செங்குருதி படிந்து கறைபடுவதும் ஆகிய போர்க்களத்தில், களத்தில் முன்னேறிக் கடும்போர் புரிவதே கருத்தாய் விரையும் காளையர் காதுகளில், படைத்தலைவர்கள் அவ்வப்போது விடுக்கும் ஏவற்கட்டளைகள், சொல்லுருவாய் வெளிப்படின், சென்றுபுக வாய்ப்பில்லை ஆதலின், அவற்றை அறிவிக்கும் குறிப்பொலிகளை, மாறிமாறி ஒலிக்கவல்ல போர் முரசொலி, ஆணைகளை அறிவித்து, வீரர்களே அதற்கேற்ப ஏவல்கொள்ளும், வெற்றிச்சிறப்பு வாய்ந்த போர்முரசு முழங்கும் போர்க்களங்களில், வெ ன் று வாகை சூடிக் களவேள்விபுரியும் பெரும்புகழ், செங்குட்டுவனேயே சென்று அடைவதாகும்.

வெற்றித் திருமகள், தன் பால் அத்துணைப் பேரன்t பூண்டு தன்னைவிட்டுப் பி ரி யா து விரும்பி வீற்றிருப்பவளாகவும், செங்குட்டுவன் வெற்றி வேட்கை அந்த அளவோடு அமைதி உற்றிலது. அதல்ை, கடலிடைத். தீவுகளை வாழிடமாக் கொண்டு, சேரநாட்டுக் கடல்வாணிகம் செழிக்கவரும் வங்கங்களை, வழிமடக்கிக் கொள்ளையிட்டு ஊறுவிளைக்கும், கடம்பர் எனும் கடற் கொள்ளைக் கூட்டத்தவரை வெற்றிகொள்வான் வேண்டி, கடும்புயல் எழுங்கால், கடல்நீர் மலைபோலும் பேரலைகளாக மாறி, வெண்னுரை தெறிக்கும் காட்சியைத், தன்கடற்படைக்கலங்களின் விரைந்த செலவு தோற்றுவிக்க, கடல்புகுந்து கடம்பர்களை வென்று அழித்து வீறுகொண்டான்.

இவ்வாறு காடும் மலையும் உள்ளி ட் ட நிலவரை

அனைத்தும், தன்தாள் நிழற்கீழ் வந்து தங்கிற்ருகவும், மேலும் போர் வெறியே மிகுந்து, கடல் கடந்தும் போய்ப் போரிடும்

23