பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருக! அது குறித்துக் கவலேம் க்டமையிற்பிறழோம்" என்னும் பேருள்ளம் வாய்க்கப் பெற்றவர், அதனுல், செங்குட்டுவன், எக்காலமும் செருவேட்கையே யுடையளுதல் பொருது, இடித்துரைத்துத் திருத்த விரும்பினர். அது கருதிய அவர், அதை அவன் உளம் உ ைக் கு ம் உரைகளால் உணர்த்த எண்ணியதன் பயணு ய்ப், புதுமுறை ஒன்றை மேற்கொண்டார். பரிசில் பெற விரும்பிவரும் பாணன் ஒருவனைப் படைத்துக் கொண்டு, அவன் வாயிடைவைத்து உரைக்கும் அப்புதுமுறை மேற்கொண்டு, அவர் உரைப்பன இவை :

'களம் புகுந்தால் காண்போம் இவ்வெற்றியை” என எடுக்கும் சூளுரை, இக்கி அளவும் பிழையா வகையில், பெரும் போர் புரியவல்ல படைமறவரே சேரநாட்டு நாற்படை புள் நிறைந்திருந்தமையால், சென்ற இடமெங்கும் வாகையே சூடி வந்தான்் செங்குட்டுவன். மேலும், அவன் போர் முரசின் ஒலி, கேட்ட சேரநாட்டு வீரர் உள்ளத்தில், ஊக்கமும் உரமும் ஊற்றெழச் செய்யும் ஆற்றல் வாய்ந்த அருமையுடையது ஆதலின், அவன் வெற்றிப்புகழ் வானளாவப் பரந்திருந்தது. அத்தகு போர் மறவரும், போர் முரசும் படைத்திருந்தமை ಬTಳು, முடியுடைப் பெருவேந்தர்களின், வெல்லற்கு அரிய தான் பெரும்படைகளையும், பலமுறை பாழ் செய்திருந்தான்். அப்போர்களின் விளைவாக, அவன் அன்பைக் கவர்ந்த நண்புடையராய், நாடாளும் அரசர்கள். தம் அரச வாழ்வில் செம்மாந்திருக்க, அவன் சினத்தைப் பெற்ற சிறுமதியாள ராகிய சிற்றரசர்கள், உலக்கையால் இடிபடும் மிளகுகள் போல், அவ ன் படைவீரர்களின் படைக்கலங்களால் தாக்குண்டு தறிக்கப்பட்ட தலையினராகித் தாழ்வுறுவா சாயினர். அதனல், போர்வீரர் எழுப்பும் ஆாவாரப் பேரொலி யும், போர்முரசுகளின் முழக்கொலியும் ஓயாது ஒலிப்பதும்,

22