பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சுடர்வீ வேங்கை

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகனய்ப்பிறந்து, வேங்கடம் குமரிகட்கு இடைப்பட்ட, தண்டமிழ் நாட்டுப் பேரரசர்களையேயல்லாமல் வேங்கடத்திற்கு அப்பாற்பட்ட அரசர்களையும் வெற்றி கொண்டதோடு அமையாமல், கடல் கடந்தும் சென்று, வெஞ்சமர் புரிந்து வெற்றி கொள்ளவல்ல விறல்மிக்கோனுய் வாழும் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் அவைக்களப்புலவராய் அமர்ந்திருந்த பரணர், வெற்றிதரு புகழ்பால் சென்ற வேட்கையுடையணுய், ஓயாது மேற். கொள்ளும் போர் நிகழ்ச்சிகளையும், போரில்பெறும் பகையாளர் பெருஞ்செல்வம் அனைத்தையும், தன்னைப் பாடிவரும் பாணர் முதலாம் இரவலர்க்கே கொடுத்து உவக்கும் கொடைவளத்தை யும், பலகால் கண்டு களித்த களிப்புமிகுதியால், அவனைப் பாவிடை வைத்துப் பாராட்ட விரும்பினர்.

பரணர், பாடிப் ப ரி சி ல் பெற்றுவாழும் வறுமை, வாழ்வினரேனும், 'பாட்டுடைத்தலைவர்யா ல், பிழை கண்ட விடத்து, அதுகாட்டி இடித்து உரைப்பின், பரிசில் பெறுவது இல்லாகும்; ஆகவே அப்பொல்லாங்கு நமக்கு வேண்டாம்; அவர்பால் எத்துணைப் பெரும்பிழை இருப்பினும், இருக்க ! அது குறித்து யாம் கவலைகொள்வது வேண்டுவதினின்று; நாம்வாழ, அன்னர், பெரும் பொருள் அளிக்கும் வகையில், அவரைப் பாராட்டுவதொன்றே நமது செயலாகுக' என நினையும் சீரிலாச் சிந்தை உடையவரல்லர். பாட்டுடைத் தலைவர்பால் காணலாகும் பிழைநெறிகளை எடுத்துக் காட்டுவதே, எம்போலும் பெரும் பு ல வ ர்க ளி ன் பேரறமாதல் வேண்டும்; அவ்வறநெறியைக் கைக்கொள்வதால், தம் வருவாய்க்கு வாய்ப்பில்லாது போவதோடு எக்கேடுவரினும்

21