பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

அவர்களைத் தொடர்ந்து, ஆடி அசைந்து அழகு காட்டும் தலையாட்டம் அணிந்து, குதித்துக்குதித்து நடைபோட்டுச் செல்லும் அக்குதிரைக் காட்சி, கரிய பெரிய கடலில் காற்றுப் புகுந்து வீசும் போது, மலைபோல் எழுந்து மறுகணமே, வெண்னுரை விரிக்கும் தலைமடங்கிச் சாய, வரிசைவரிசையாக வந்து கரைக்கண் மே து ம் கடலலைகளை நினைவூட்ட, குதிரைகள், தம் நடை அழகால் மட்டுமல்லாமல், கணக்கிட்டு காண மாட்டாப் பெருக்கத்தாலும், அக்கடல் அலைகடளோடு முற்றிலும் ஒத்திருப்பக் கண்டு உளம் மகிழ்ந்தார்.

அவ்வாறு மகிழ்ந்து நின்றார் உள்ளத்தில், அவர் கருத்தில் புகுந்த கடல் அலைக்காட்சி, செங்குட்டுவன் கடலிடையே பெற்ற பெருவெற்றியொன்றை நினைவூட்டி விட்டது. மாநிலத்து மக்கள் எல்லாம் என்னேஇவன் ஆற்றல்!” என எண்ணி வியக்குமாறு, மண்ணிடை மன்னர்கள் அனைவரையும் வெற்றி கொண்டு விட்டான் செங்குட்டுவன். அதனல், முன்னேறிச்சென்று போரிடற்காம் வாய்ப்பு, அவன் படை வீரர்க்கு இல்லையாயிற்று. ஆனால், போர் புரிந்து பழகிய அவர்களால் வாளாகிடப்பது இயலாது என்பதை அறிந்திருந் தமையால், முத்துப்படுமளவு முதிர்ந்து ஒளிவீசும் வெண் கோடுகளைக்கொண்ட களிறுகள் மீது அமர்ந்து, உலாவரும் உயர்நிலையினராகிய, பேரரசர்களும் சிற்றரசர்களுமாகிய,

தன்னல் வெற்றி கொண்ட இம்மண்ணுள் மன்னர்கள்,

மீண்டும் படையேந்திவிடாது, என்றும் தன்னைப் பணிந்தே

கிடக்கும் வகையில், வெற்றிகொண்ட நாடுகளைக்காக்கும்

பொறுப்பினை அவர்பால் ஒப்படைத்தான்் செங்குட்டுவன். அது பெற்ற அப்படை வீரர்கள், தேர் முதலாம் நால்வகைப் படை

யோடு நால்வேறு திசைகளிலும் சென்று, நாடு காவற்

பணியை, நன்கு புரிந்து வந்தனர்

36