பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் நாட்டை, அவ்வாறு அழிக்கலாகா அரண்உடைய தாக ஆக்கிவிட்டமையால், நாடு காவல் பற்றிய கவலை ஒழியவே, செங்குட்டுவன் கருத்து, கடல் வாணிகத்திற்குக் கேடுபுரியும் கடற்கொள்ளைக் கூட்டத்தவர்மீது சென்றது. செல்லவே, ஒரு பெரும்படையோடு கடலைக்கடந்துபோய், அக்கடம்பரை வென்று அழித்தான்். அன்று அக்கடலிடையே அவன் கொண்ட வெற்றியைக், கூத்தர்க்கு அவன் வழங்கும் கொடைப்பொருளாகிய குதிரைகளுக்கு உவமையாக, உள்ளம் இன்று உணர்த்திய கடல் அலைக்காட்சி நினைவூட்ட, நெஞ்சு நிறை மகிழ்வெய்தினர் புலவர். அம்மகிழ்ச்சியே உருவுகொண்டு வந்ததுபோல், வந்து பிறந்தது ஒரு பாட்டு. அதுவே இது.

உண்பார்க்கு உ று சு ைவ தருமளவு புளிப்பேறிய உயர்ந்த மது என்பதை உணர்த்த விரும்பிய புலவர், அக் கருத்தை, மது நிறைந்திருக்கும் குடம், மது புளிப்பேறப் புளிப்பேறப், டொங்குவதால், தன்னை உண்டார் உடல், தான்ே உருகுவதுபோல் அசைந்தாடுவதாயிற்று என்று கூறுமுகத்தான்் எடுத்துரைத்திருக்கும் சி ற ப் பா ல், அப்பொருள் பொதிந்து கிடக்கும் தசும்பு துளங்கு இருக்கை என்ற தொடரால் அப்பாவிற்கும் பெயர் சூட்டியுள்ளனர் போலும்.

2. இரும் பனம் புடையல், ஈகை வான்கழல்,

மீன் தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச் சிரல் பெயர்ந்தன்ன நெடுவள் ஊசி, நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்

5 அம்புசேர் உடம்பினர், நேர்ந்தோர் அல்லது

தும்பை சூடாது மலைந்த மாட்சி அன்னேர் பெரும ! நன்னுதல் கணவ ! அண்ணல்யானை அடுபோர்க்குட்டுவ !

37