பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஏரு ஏணி

வஞ்சி மாநகரில், சேரர்கோ செங்குட்டுவன், பெருங் கோயிலில், அவன் உள்ளம் கவரும் ந ல் ேல | ர | ய் வாழ்ந்திருந்த பரணர், நாள்தோறும் அரசவைக்குச் சென்று, ஆங்கு, அமைச்சர் ஆன்ருேர் சூழ, அரியணையில் இருந்து, முறை வேண்டியும் குறை போக்கவும் வருவாரின் வேண்டுகோள் ஏற்று, வேண்டுவ புரிந்து அனுப்பும் செங் குட்டுவன் நாளோலக்கச் சிறப்பினைக் கண்டுகளித்து வருவா ராயினர்.

வளம் இன்மையால் வலுமைத்துயர் உற்று, தன்னை வந்தடையும் புலவர் பெருமக்களைச், செங்குட்டுவன் தன்ைேடு உடன் இருத்தி, முதற்கண் அவரை உண்பித்துப் பின்னரே தான்் உண்ணுவன். தம் ஆடல்பாடல்களால், தன்னையும் தன் ஒட்டு மக்களையும் மகிழ்ச்சிப் பெருங்கடலுள் ஆழ்த்த வல்லாராகிய, பாணர் கூத்தர் போலும் இரவலர்க்குப். போதும் போதும் என அவர் கூறுமளவு பொன்னேயும் பொருளையும் வாரி வாரி வழங்குவன். கேட்டார்ப் பிணிக்கும் பேரின்பம் பயக்கவல்ல இசைக்குரலை இயற்கையாகவே பெற்றிருக்கும் கின்னரப்பறவையைத், தம் இன்னிசையால் வெற்றி கொண்டு, யாழிசையோடு ஒன்றிப் பாட வல்ல விறலியர்காள் வருக! வந்து, விரும்பும் பிடியானைப் பரிசல் பெற்றுச் செல்க ! எனக் கூவி அழைத்துக் கொடுப்பன்.

இவ்வாறு, தன்னை நாடி வந்தாரும், பாடி வந்தாரு மாகிய இரவலர்க்கு அவரவர் விரும்பும் பரிசளிப்பு நிகழ்ச்சி முடிவுற்ற பின்னர், அவர்க்கு அவ்வாறு வழங்கவும், வற்ருது பெருகவல்ல விழுநிதியைத் தான்்.அடையத், தனக்குத் துணை புரிபவராகிய தன் படைவீரரைப் பெருமை செய்வான்

41