பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்கள் விரும்பியுண்ணும் இறைச்சியை, உண்பதற்கினிய உணவாக ஆக்குவான் எரித்த அடுப்பு, எரிந்து கொண்டே யிருக்க, ஆங்கிருந்து எழும்புகை, வானம் எங்கும் சென்று பரவும். மற்ருெபால் எறும்பு முதலாயின மொய்க்காமை வேண்டி, மூங்கிற்கழிகளால், முக்கோண நாற்கோண ஏணி உருவில் கோத்த, கோக்காலி எனும் உயர்ந்த அடைப்புகளுக் குள்ளே, அவை இடம் கொள்ளுமளவு பருத்துத் திரண்ட கள்குடங்கள் இருக்க, அவை நிறைந்து வழியுமாறு இனிய மதுவைக் கொண்டுவந்து ஊற்றும் ஏவல் இளையர், அதை உண்பார், உண்ண உண்ணக் குறையுந்தொறும் நிறை வித்தவாறே இருப்பர். அத்தகு அட்டிற்சாலையில், அவர்களை அமர்த்தி, விருந்துணவை வயிருர வழங்கிய பின்னரே

அவர்களை வழியனுப்புவன். -

செங்குட்டுவனின் இ ந் ந .ே ளா ல க்க நலம் கண்டு பாராட்டிய புலவர், அந்நலம், அவன் பகைவரும் பாராட்டும் பெருமையுடையதாம்: அவரெல்லாம் அவளுேடு பகையுடை யார் என்பது உ எண் ைம .ே ய யென்ருலும், அவன்பால் பொதிந்து கிடக்கும் அந்நல்லியல்புகளின் பெருமை, அவரை யும் அறியாமல் அவனைப் பாராட்டப்பண்ணி விடுவதால், "பகைவராம் நம் பாராட்டையும் பெறும் செங்குட்டுவன் பெருமைதான்் என்னே !’ என அவர்களும் வியந்து பாராட்டு. வர் என்பதறிந்து பெருமிதம் கொண்டார். -

பரணர் நாடுபல கண்டவர்; அந்நாடாளும் அரசர் எல்லாம் பண்டொரு காலத்தில், வருவார்க்கு வழங்கி வந்தனர் என்ருலும், இன்று அது செய்யமாட்டாது வளம் இழந்து கிடக்கின்றனர். அதனல், அவர் அளித்த பொருள் பெற்று உயிர்பேணி வந்த பரிசிலர் எல்லாம், வாழும்வகை காணமாட்டாது வருந்துவாராயினர். ஆங்கெல்லாம் அத்தகு

43