பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடர்ப்பாடு தலை விரித்தாடும் நேரத்தில், ஈண்டு, செங் குட்டுவன், வருவார் எவரையும் வ றி .ே த அனுப்பாது, அனைவர்க்கும் வாரி வாரி வழங்குவதும், அவ்வாறு வழங்கற். கேற்ற வளம்பெற்றுத் திகழ்வதும் கண்ணுற்ற புலவர்க்கு, வழியிடைக் கண்ட இருவேறு காட்சிகள் நினைவிற்கு வரவே, அவற்றின் வயமாகி விட்டார் சிறிது நேரம்.

பெருமூங்கிற் புதர்கள் எல்லாம் புலர்ந்து உலர்ந்து போகுமாறு, மழை, தன் பெய்யும் தொழில் அறவே மறந்து விடவே, அக்கொடுமையோடு நில்லாது, ஞாயிறும் தம் வெம்மையெல்லாம் காட்டிக் காயத் தொடங்கிவிட்டமையால், மலைகளில், மரம் செடி கொடிகள் மட்டுமேயல்லாமல், பசும் புற்களும் உயிரிழந்து போயின. அத்தயை கொடிய பெரிய வற்கடகம் ஆங்கு உண்டாக, சின்னம் சிறு அருவிகளையும் காணமாட்டாது கலங்கியவாறே அக்கொடுவழியைக் கடந்து வந்தபுலவர், சேரநாட்டிற்குப், பெருமை அளிக்கும் பேராற்றங் கரையை அடைந்ததும், வானத்தில் கார்மேகம் கொண்டல் கொண்டலாக எழ, இடி எக்காளம் இட, மின்னல் கண்ணுெளி பறிக்க, திடுமெனப் பெருமழை பெய்ய, அவ்யாற்றின் இரு மருங்கும் அமைந்திருக்கும் மலேபோலும் பெருங்கரைகளில், ஆங்காங்கே உடைப்பெடுத்துக் கொள்ளுமாறு வெள்ளம் புரண்டு வழியும் காட்சியையும், புதுமழை பெய்யக்கண்டு பூரித்துப் பொன்னேர் பூட்டும் உழவர், தமக்கும் தம் உழு கருவிகட்டும் கொன்றைமலர் சூட்டிக்கொண்டு தொழில் தொடங்கும் காட்சியையும் கண்டார். அக்காட்சிநல நிறை. வோடு இவண் வந்தபுலவர் ஈண்டு நிகழும் இந்நிகழ்ச்சி களோடு, அவற்றை ஒப்பிட்டு நோக்கி உளம் மகிழ்ந்தார்.

- இவ்வாறு வாரி வழங்கும் வள்ளல்பெருந்தகையாய் வாழ்வது, எல்லே சுருங்கிய சிறு நாடுடையார்க்கு ஆகாது;

44