பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரநாடும் தனக்கென வரையறுத்த, தன் பண்டை எல்லே யுடையதாகவே இருந்திருக்குமாயின், அந்நாடாளும் இவன லும் இயலாது; ஆனால் இவன் அரியணை புகுந்ததும் அதன் எல்லையை எல்லையற்றதாகப் பெருக்கிவிட்டான். இன்று, வடபேரிமயமும் தென்தமிழ்க் குமரியுமல்லவோ, அவன்நாட்டு எல்லைகளாகிவிட்டன! அத்தகு பெருநாடு ஆளும்பேறு பெற் றமையால் அல்லவோ, இவனுல் அவ்வாறு வரையாது வழங்கி வாழ முடிந்தது என்று எண்ணி, இன்புற்று நின்ற புலவர் உள்ளத்தில், அவ்வடபேரிமயம் வாழ் மக்கள் நலமும், அவர்தம் மனநலமும் இடம்பெறவே, அவ்வகக்காட்சி இன்பத்துள் ஆழ்ந்து விட்டார்.

நீருண்ட கார்மேகம்போல் கருகருவென வளர்ந்திருக்கும் தம் கூந்தலோடு, கவரிமான் மயிர்கலந்து முடித்துக்கொண்ட கொண்டையால் கவின்பெற்ற காரிகை நல்லார், சிறந்த பல அணிகளால் தம்மை அழகு செய்துகொண்டு, ஆடிடம் புகுந்து ஊசலாடி உளம் களிந்திருக்குங்கால், ஆங்குக், காட்டுயானைக் கூட்டம் புகுந்தபோதும், அது கண்டு அஞ்சி ஒடிவிடாது, அக் கூட்டத்துள், தாம் விரும்புமாறு, புதியவாக வந்திருக்கும் பெண்யானைகள் எத்தனே என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வமே முன்னிற்க, அவற்றை எண்ணத்தொடங்கி, அவை, எண்ணிக்காணமாட்டா எண்ணுடையவாதல் அறிந்து மகிழும் எழிலே, அம்மலை மீது வீற்றிருக்கும் கண்ணுதற்பெரும் கடவுட்காட்சியினும், முந்துற்று நிற்க, அம்மகளிர் தம், அழகுத் திருவுருவை, அகக்கண்களால் முதற்கண் கண்டு, பின்னர், அம்மலையுறையும் அண்ணலை எண்ணி நெஞ்சுருகினர்.

உயர்ந்த இடத்தே உள்ள ஒரு பொருளே, ஏறிஎடுக்கத் துணை புரிவது ஏணி; ஆனால், மதுக்குடங்கள் வைத்தற்கு என

அமைத்த கோக்காலி, முக்கோண, நாற்கோண வடிவுடைய

45