பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏணிபோல் அமைந்திருக்குமாயினும், அதன் அமைப்பு, ஏறத் துணைபுரிவதற்கு அல்லாமல், எறும்பு முதலாயின எருமை குறித்தே ஆக்கப்பட்டதாம்; ஆக, ஏணியின் தொழில்புரியா தாகவும், ஏணி எனும் பெயர் இட்டமைக்கு, ஒர் அமைதி காணும் நிலையால், ஏரு ஏணி எனப்பெயரிட்ட சிறப்பால், இப்பாட்டிற்கு அதுவே பெயராய் அமைந்தது.

3. கவரி முச்சிக், கார் விரி கூந்தல்,

ஊசல் மேவல், சேய் இழை மகளிர், உரல்போல் பெருங்கால், இலங்கு வான் மருப்பின், பெருங்கை, மதமாப் புகுதரின், அவற்றுள் 5 விருந்தின் வீழ்பிடி எண்ணுமுறை பெருஅக், கடவுள் நிலைஇய கல்ஓங்கு நெடுவரை, வடதிசை எல்லை இமயமாகத், தென்னங்குமரியொடு ஆயிடை அரசர் முரசுடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பெழச் 10 சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த,

போாடுதான்ப் பொலந்தார்க் குட்டுவ ! இரும்பணை திரங்கப் பெரும்பெயல் ஒளிப்பக், குன்று வரங்கூரச், சுடர்சினம் திகழ, அருவி அற்ற பெருவறற் காலையும், 15 அருஞ்செலல் பேராற்று இருங்கரை உடைத்துக்,

. கடிஏர் பூட்டுநர் கடுக்கை மலைய,

வரைவில் அதிர்சிலை முழங்கிப் பெயல் சிறந்து ஆர்கலி வானம் தளிசொரிந்தாங்கு, உழவர் ஆர ஒம்பாது உண்டு, 20 நகைவர் ஆர நன்கலம் சிதறி

ஆடுசிறை அறுத்த நரம்புசேர் இன்குரல் பாடுவிறலியர் பல்பிடி பெறுக! துய்வி வாகை நுண்கொடி உழிஞை

46