பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வென்றி மேவல் உருகெழு சிறப்பின் 25 கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக!

மன்றம் படர்ந்து மறுகு சிறை புக்குக் கண்டி நுண்கோல் கொண்டு களம் வாழ்த்தும் அகவலன் பெறுக மாவே! என்றும் இகல்வினை மேவலை ஆகலின், பகைவரும் 30 தாங்காது புகழ்ந்த, துரங்கு கொளை முழவின்,

தொலையாக் கற்ப ! நின் நிலை கண்டிகுமே; நிணம்சுடு புகையொடு கனல்சினம் தவிராது நிரம்பு அகல்பு அறியா ஏரு ஏணி நிறைந்து நெடிது இராத் தசும்பின் வயிரியர் 35 உண்டெனத் தவாஅக் கள்ளின்

வண்கை வேந்தே நின்கலி மகிழானே’’.

துறை : இயன்மொழி வாழ்த்து வண்ணம் : ஒழுகுவண்ணம் துரக்கு : செந்துக்கு பெயர் : ஏரு ஏணி

குட்டுவl கற்ப வேந்தே! நின்கலி மகிழான் நின்நிலை கண்டிகும் எனக் கூட்டிப் பொருள் கொள்க.

இதன் பொருள்: கவரிமுச்சி = கவரிமான் மயிர்கொண்டு முடித்த கொண்டையினையும், கார்விரி கூந்தல் = கார்மேகம் போல் கருத்த, அடர்ந்த கூந்தலையும், ஊசல் மேவல் = ஊசலாட்டு விளையாட்டின் மேல் சென்ற விருப்பத்தினையும், சேய் இழை மகளிர் = சிறந்த அணிகலன்களையும் உடைய மகளிர், உரல் போல் பெருங்கால் உரல்போலும் பருத்த கால்களையும், இலங்கு வான் மருப்பு - ஒளிவீசும் வெண்ணிறத் தந்தங்களையும், பெருங்கை = நீண்ட பெரிய கையையும்,

47