பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதமா = மதத்தையும் உடைய பெரிய யானைக் கூட்டம், புகுதரின் = தாம் இருந்து விளையாடும் விளையாட்டகத்தே புகு. மாயின், அவற்றுள் = அவ்யானைகளுள், விருந்தின் வீழ்பிடி = புதியவாய்ப் புகுந்த, தாம் விரும்பும் பிடியானைகளை, எண்ணு முறை பெரு = எண்ணிக்கை காண மாட்டா இயல்புடையதும், கடவுள் நிலைஇய = கண்ணுதற் கடவுள் கோயில் கொண்டிருப் பதும் ஆகிய கல்ஓங்கு நெடுவரை இமயம் = கற்களால் உயர்ந்த பெருமலையாகிய இமயம். வடதிசை எல்லையாக = வடக்கெல்லையாக. தென்னங்குமரியொடு - குமரிக்கோடு தென் எல்லையாக ஆ யி ைட அரசர் அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நாடாண்டிருந்த அரசர்களின். முரசுடைப் பெரும் சமம் ததைய - முரசு முழங்கும் பெரும் போர்கெடவே, ஆர்ப்பெழ = வெற்றி ஆரவாரம் எழ விரைந்து. சொல் பல நாட்டை - அப்பகை அரசர்களின் பலரும் புகழ்ந்து பாராட்டும் பல நாடுகளையும். தொல் கவின் அழித்த = பழைய பேரழகு அழியப் பண்ணிய, போர் அடுதான் போரில் எதிர்ப்படும் பகைவர்களையெல்லாம் அறவே அழிக்கவல்ல பெரிய படையை. யும், பொலந்தார் - பொன்னலாம் மாலையினையும் உடைய. குட்டுவ = செங்குட்டுவனே! இரும்பணை திரங்க = பெரிய மூங்கிற் புதர்களெல்லாம் வாடி உலர்ந்து போகுமாறு. பெரும் பெயல் ஒளிப் - பெரிய மழை பெய்யாது பொய்த்தலாலும், குன்றுவறம் கூர - மலைகள் மரம் செடி கொடிகளாம் தம் செல்வங்களை இழந்துபோகுமாறு. சு. டர் சினம் திகழ= ஞாயிற்றின் வெயில் வெப்பம் மிகுந்து விட்டமையாலும். அருவி அற்ற பெருவறற் காலையும்=சின்னஞ்சிறு அருவிகளும் நீரோட்டம் இழந்துவிட்ட பெரிய வறுமைக்காலத்திலும். அருஞ்செலல் பேராற்று = கடந்து போதற்கரிய வெள்ளப் பெருக்கினை உடைய பேராற்றினது, இருங்கரை உடைத்துபெரியகரைகள் உடைப்பெடுத்துப் போகுமாறும். கடிஏர் பூட்டுநர்=பொன்னேர் பூட்டும் உழவர். கடுக்கை ແຂຶ້ນມ=

48