பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொன்றை மலர் சூடித் தம் தொழிலைத் தொடங்கு மாறும். ஆர்கலி வானம்=பேரிடிகளோடு கூடிய மேகம். வரைவில் அதிர்சிலே முழங்கி=எண்ணற்ற இடிகளை இடித்தவாறே. பெயல் சிறந்து=பெய்யும் தொழிலில் மிகுந்து, தளி சொரிந்” தாங்கு=பெரு மழைநீரைத் தாரைதாரையாகச் சொரிந்தது போல. உறுவர்.ஆர ஒம்பாது உண்டு - தன்னை வந்தடையும் புலவர்கள் நிறைய உண்ணுதற் பொருட்டுத் தனக்கென எதையும் வரைந்து கொள்ளாது அனைத்தையும் அவர்க்கே வழங்கி எஞ்சியதை மட்டுமே உண்டு. நகைவர் ஆர நன்கலம் சிதறி= ஆடல் பாடல்களால் தன்னை இன்புறுத்தும் பாணர், பொருநர், கூத்தர் போலும் இரவலர் நிறைவாழ்வுபெற நல்ல பல பொற்கலங்களை வாரி வழங்கி. ஆடுசிறை அறுத்த=ஆடும் சிறகுகளை உடையதான் கின்னரம் என்னும் இசைப்பறவையைத் தம் இன்னிசையால் வென்றவரும். நரம்புசேர் இன்குரல் = யாழ் நரம்புகளோடு ஒன்றி இயைந்து செல்லும் இனிய குரல் அமையப் பெற்ற வரும். பாடு விறலியர்=பாடவல்லவரும் ஆகிய விறலியர். பல்பிடி பெறுக=பற்பல பிடியானைகனைப் பரிசிலாகப் பெறுவார்களாக என்றும். துய்வி வாகை=வென்ற வீரர் மட்டுமே அணியலாகும் வாகை மலர்மாலையும். நுண். கொடி உழிஞையும் = பகைவர்தம் பற்றற்கரிய அரண்களை வென்று ைக ப் ப ற் று ம் வீரர்கள் மட்டுமே அணியலாகும் நுண்ணிய உழிஞைக் கொடியும் உடையராய், வென்றி மேவல்=என்றும் வெற்றியே விரும்பும் உருகெழு சிறப்பின்= பகைவர்க்கு நடுக்கத்தைத் த ரு ம் தருகளுண்மைமிக்க. கொண்டி மள்ளர்=பகை நாட்டுச் செல்வங்களைக் கொள்ளை. யிட்டுக் கொண்டுவந்து குவிக்கும் வீரர்கள். கொல் களிறு பெறுக=கொல்லும் களிறுகளையே பரிசிற் பொருளாகப் பெறுவார்களாக என்றும். மன்றம் படர்ந்து=ஊர் மன்றங்களில் இருந்தும். மறுகு சிறைபுக்கு=தெருக்களில் இருமருங்கிலும் உள்ள வீட்டு வாயில்கள் தோறும் சென்றும், கண்டி

4 49