பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நுண்கோல் கொண்டு=தம் கு லத் தி ற்கு உரியதான் கணுக்களோடு கூடிய சிறிய கோல் ஏந்திய கையினராய், களம்பாடும்=அந்நாடாளும் அரசன் அமரிடைப் பெற்ற வெற்றியைப் பாடிப்பாராட்டும். அகவலன் பெறுக மாவே= பாணன் பரிசிலாக் குதிரைகளைப் பெறுவாளுக என்றும். இகல்வினை மேவலை ஆகலின்=பரிசளிக்கும் நிலையிலும் போரினையே விரும்பும் உள்ளம் உடையையாய் இருத்தலின் பகைவரும் தாங்காது புகழ்ந்த=பகைவர் ஆயினுரும், தம் மனத்திடை எழுந்த வியப்பினைத் தாங்க மாட்டாது புகழ்ந்த பெருமையினையும். து ங் கு .ெ க ளை முழவின் = தூங்கல் ஒசைக்கு ஏற்ப முழங்கும் கொடை முதலாம் தொழில் உணர்த்தும் மும்முரசுகளையும். தொலையாக் கற்ப=அளந்து காணமாட்டாக் கல்வி. அறிவு, ஒழுக்கங்களையும் உடையவனே! கனல் சினம் தவிராது = நெருப்பின் வெப்பம் நீங்காது இருக்க. நிணம் சுடு புகையொடு=அந்நெருப்பில் நிணத்தைச் சுடுவதால் எழும் புகை மணத்தோடு. நிரம்பு அகல்பு அறியா = முழுதும் அடைத்துக் கொள்வதும், சிற்றே இடைவெளிவிடுவதும் இல்லாத. ஏருவரணி=கோக்காலியின் மீது வைக்கப் பெற்றிருப்பதும். நிறைந்து நெடிது. இராத்தசும்பின்=கள்ளால் நிறைந்து வழிவதும், ஆனால், அந்நிறைவுற்ற நிலை நெடும்பொழுது இருக்கப்பெருததும் ஆகிய க ட் கு ட ங்க ளி ல் இட்டு வைத்திருக்கும். வயிரியர் உண்டெனத்தவாக் கள்ளின்=பாணர் முதலாம் இரவலர்கள் உண்டவழியும், குறையாது எக்காலமும் நிறைந்தே கிடக்கும் கள்ளினையும் உடைய, வண்கை வேந்தே = வாரிவழங்கும் வள்ளன்மையால் வனப்புற்ற கைகளை உடைய வேந்தே ! நின் கலி மகிழான் = நின் தி ரு வோ லக் க நலத்தால். நின்நிலை கண்டிகும்=நின்பெருமை அனைத்தையும் அறிந்து கொண்டோம் என்றவாறு.

50