பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசர்கள் நாளோலக்க அவையில் அமர்ந்து, நாற்படை வீரர்க்கும், பாணர் முதலாம் இரவலர்க்கும் வரையாது வழங்குவதை வழக்கமாகக் கொள்வர் என்பதைப், பாண்டியன் நெடுஞ்செழியன்,

'வில்லைக் கவை இக் கணைதாங்கு மார்பின்

மாதாங்கு எறுழ்த்தோள் மறவர் தம்மின்;

கல்இடித்து இயற்றிய விட்டுவாய்க் கிடங்கின்

நல்லெயில் உழந்த செல்வர்த் தம்மின்' என நிரலே, நாற்படை வீரர்களை அழைத்துச் சிறப்புச் செய்த பின்னர்,

"யாவரும் வருக! ஏைேரும் தம்மென வரையா வாயில் செறாஅதிருந்து பாணர் வருக ! பாட்டியர் வருக ! யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக ! என இருங்கிளை புரக்கும், இரவலர்க் கெல்லாம் கொடிஞ்சி நெடுந்தேர் கணிற்ருெடும் வீசி'

எனப், பாணர் முதலாயினரை அழைத்துப் பரிசில் அளித்துப்

பெருமை செய்வன் என, மதுரைக்காஞ்சி கூறுவது காண்க.

(728 - 752)

51