பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நோய்தபு நோன்தொடை

கடல் பிறக்கோட்டிய .ெ ச ங் கு ட் டு வ ச் செம்மல்பால், சிறந்த பல பண்புகள் நிறைந்திருக்கக் கண்டார் பரணர். செங்குட்டுவன் சிறந்த வீரன்; வானத்துக் கருமேக மாசினைத், தம் வெற்றிக் கொடித்துகிலால் துடைப்பன போலும், நீண்ட பெரிய கொடிகள், வானளாவ உயர்ந்து பறக்க, விரைந்தோடும் தேர் முதலாம் நால்வகைப் படைகளை நிறையக் கொண்டு, நெடிது ஆண்டவர்களாகிய, வெல்லுதற்கரிய பெரிய பெரிய வேந்தர்களையும் எளிதில் வெற்றிகொண்டவன் அக்குட்டுவன். அத்தகு பேராற்றல் வாய்ந்த அவன், தன்பால் அத்துணை ஆற்றல் அமைந்திருப்பதால், காரணம் குறியாது, கண்ட அரசர் மீது போர்தொடுக்கும் அழிவுள்ளம் உடையவன் அல்லன். தனக்கோ, தன்னைச் சார்ந்தவர்க்கோ கேடு புரிந்த அரசர்களை அழித்தொழிக்கும் அறத்தொண்டிற்கு மட்டுமே, அவன் கொற்றம் தொழிற்படும்.

மோகூர் மன்னனும் பழையன் என்பான் பேராற்றல் வாய்ந்தவன். பாண்டியன் தலையாலங் கானத்துச்செரு வென்ற நெடுஞ்செழியனின் படைத்தலைவனுய்ப் பணிபுரிந்தவன். கொற்றம் மிக்க கோசர் படைத்தலைவன். வடுகர் வழிகாட்டத் தமிழகத்தை வென்று பணிகொள்ளும் வேட்கையோடு வந்த, வடபேரரசராம் மெளரியரின், பெரும்படையைப் பாழாக்கித் துரத்திய பெருவீரன். அவன் அத்துணைப் பெரு வீரய்ை விளங்குவது காணப் பொருமையாலோ, அவனினும் தான்ே ஆற்றல் வாய்ந்தவன் என்பதை, வையகம் கண்டு வாழ்த்தவேண்டும் என்ற வெற்றிப்புகழ் வேட்கையாலோ, அறுகை எனும் ஆற்றல் மறவன் ஒருவன், மோகூர் அரணை முற்றி வளைத்துக்கொண்டான். ஆனால், பழையன் பெரும்படைமுள் நிற்கமாட்டாது தோற்ருன். அதுகாறும், புக்க

52