பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போரில் எல்லாம் வெற்றியேகொண்டு, விறுபெற்ற அவளுல் அத்தோல்விப் பயனும் பெரும் பழியைத் தாங்கிக் கொள்ள இயலாமையால் நாணி, தொலை நாடு சென்று, தலைமறைத்துக் கொண்டான். r

அறுகைக்கு நேர்ந்ததை அறிந்தான்் செங்குட்டுவன்; அறுகை, அவன் ஆருயிர் நண்பன். அவன் சேணுடு சென்று விட்டானுயினும், அவனைப் ப ற் றி ய பழிச்சொல், அவன் ஆருயிர் நண்பனுகிய தன்னை விட்டு அகலாது, தன்னையே சூழ்வது கண்டான். தான்் தோற்றுப்பெற்ற பழியன்று; ஆயினும், அப்பழிக்குப் பெரிதும் நாணினுன் செங்குட்டுவன். அதனுல் அப்பழிவரக் காரணமாயிருந்த பழையன் மீது, பகை கொண்டான். விளைவு மோகூரான் அழிவல்லது வேறு ஆதல், இயலுமோ? குட்டுவன் படை புகுந்த மோகூர், முற்றிலும் அழிந்து விட்டது. இயற்கை அ ன் னே யி ன் சீற்றத்தால் இடியேறு தாக்கியிருந்தாலும், எழுகடல் புகுந்திருந்தாலும், நிலவரையே பிளந்திருந்தாலும், இத்துணைக்கேடு நிகழ்ந். திருக்காது எனக் கூறிக், கலங்கத் தக்க பெருங்கேட்டிற்கு உள்ளாகி விட்டது. அது. அதுமட்டுமன்று. 'இன்னது விளையின் இன்னது செய்வேன்' எனச் சூள் உரைத்துக் களம் புகுந்து, உரைத்த உரை பொய்யாகாவாறு வென்று மீளவல்ல பழையன் பேராற்றல் எங்கோ சென்று அடங்கி விட்டது. அவன் வெற்றி முரசு, இவன் உடைமை ஆயிற்று. அம்மட்டோ தன் உயிர் என மதித்து, அவன் வளர்த்து வந்த அவன் காவல் மரமாம் வேம்பினை வெட்டி வீழ்த்தின்ை. அதலுைம் செங்குட்டுவன் சினம் தணியாதாக, அதைப் போர்முரசு பண்ணற்காம் சிறு சிறு துண்டங்களாக்கினுள். அத்துண்டங்களை அவன் உரிமைமகளிர் மயிர்களைந்து திரித்த கயிற்றைக்கொண்டு, பிணித்து, அப்பிணிப்பை அவன் போர்க்களிறுகளைக் கொண்டே ஈர்க்கப் பண்ணித்

53