பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னேரில்லாத் தன்தலைநகராம் வஞ்சிமாநகர்க்குக் கொண்டு வந்து சேர்த்தான்். -

அத்துணைக் கொற்றம்மிக்க அக்குட்டுவன்பால், கொடைக் குணமும் குறைவறக் குவிந்து கிடந்தது. அரிய போர்பல ஆற்றி, வெற்றிபல பெற்றதன் பயனய், அவனை வந்தடையும் அளவிறந்த பொருள்களில் ஒருசிறிதையும் தன் உடைமை. யாக்கிக்கொள்ளும் உள்ளத்தைக் கைவிட்டு, அவ்வளவு பொருளையும் புலவர், பொருநர், பாணர், கூத்தர், விறலியர் போலும் இரவலர்களுக்கே வழங்கிவிடுவன்.

இவ்வாறு, நண்பர்பால் அன்பும், அவர் துயர்துடைக்கு மளவு பெருகிய ஆற்றலும், வருவார்க்கு வழங்கி அவர் வறுமை தீர்க்கும் அருள் உள்ளமும் உடையனே அல்லது, "என்னை வெற்றிகொண்டு விட்டான் இவ்வேந்தன்; அதனுல் வந்துற்ற வெம்பழி வாட்டுகிறது என்னை, ஆற்றல்மிகு அரசர்காள்! அவனோடு போராடி வென்று, என்பழி தீர்க்கப் படைத்துணை அளியுங்கள்” எனப், பிற அரசர்பால் சென்று படைத்துணை வேண்டுமளவு ஆற்றல் அற்றவனோ, அதைப் போலவே, "வளமெலாம் வறண்டுவிட்டது; வறுமையில் வாடுகிறேன் யான்; வாழ ஏதேனும் வழங்குங்கள்', எனப் பிறர் வாயில் முன் நின்று வாய் திறந்து இரப்பவனோ அல்லன் செங்குட்டுவன்.

குட்டுவன் கொற்றமும் கொடையும், வேண்டுவார்க்கு வழங்கவல்ல வான்புகழ் உடையவாதல் அல்லது, பிறர்பால் இரந்து நின்று வேண்டாத, வேண்டாமையாம் விழுச்செல்வத் தின் வழியவாதல் அறிந்த பரணர், அத்தகையான் நெடிது வாழ வேண்டும்; அவன் வாழ்வால் இவ்வையகம் வாழ்வு பெறல் வேண்டும் என்று விரும்பினர். ஆனல் உலகியல் உணர்ந்த அவர் உள்ளம், வாழ்வு நிலையற்றது என்பதை

54