பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்கு உணர்ந்திருந்தது. மும்முரசு முழங்க ஒப்பற்ற பேரரசை வழிமுறை வழிமுறையாகப் .ெ ற் று, ஆளும் பேரரசுகள் பலவற்றை வென்று, கடல்சூழ்ந்த இவ்வுலகு அனைத்தையும், தம்வெண்கொற்றக் குடையொன்றின் கீழ்க் கொண்டு வந்து, தனியரசு நடாத்திய மன்னர் மன்னர்களும், இறுதியில் ஒருநாள் மாண்டுபோக, ஒரு பகலெல்லாம் ஓயாது, தேடியதன் பயனுய்க்கொண்ட, கொழுப்பு இல்லையாமாறு உலர்ந்துபோன இறைச்சித் துண்டையும், வைத்த இடத்தை மறந்துவிட்டு வருந்தும், கூகைச் சேவலின் துயர்கண்டு, தான்ும் பெரும் துயர்கொண்டு, அதன் பெடையைக் கூகை, குரல் எழுப்பி அழும் ஒ லி யே, யாண்டும் கேட்பதாய, இடுகாட்டுத் தாழிக்குள் இட்டுப் புதையுற்றுப் போவதே உலகியலாம் என்பதை உணர்ந்திருந்த அவர், அத்தகைய இறப்பு நிலை செங்குட்டுவனுக்கு வருதல் கூடாதே என்ற ஆர்வம் கலந்த அச்சம் உடையராகி, ஊரும் உலகமும் புகழும் உயர்வுடைய அவன் உடல், பாடிப் பரவும் பாணர் மகளிர் கண் களில் மட்டுமே படுவதாக தன்னிடம் புதைக்கப் பெறுவார்க்கு இறுதி வணக்கம் கூறி, வழி அனுப்பும் உளத்தராய், அவர் பின்னத்தைப் பின்தொடர்ந்து தன்பால் வருவார், ஆண்டு இருக்கும் காலம் சிறிதேயாதலின், அச்சிறுபொழுதிற்குப் போதுமான சிறு நிழலே தருவனவாகிய, வன்னி மரங்கள் நின்ற மன்றங்களையுடையவாகிய இடுகாட்டின் கண்களில், அவன் உடல் பட்டு விடாதாகுக!” எனத், தம் வேட்கை நிறைவேறத், தாம் வழிபடு கடவுளரை வழுத்துவராயினர்.

குட்டுவன், பகைவர் எறியும் படைக்கலத் தொடையேற் றும், மகளிர் சூட்டும் மலர்த்தொடையேற்றும், புலவர் புகழ்ந்துபுனையும் பாத்தொடையேற்றும் பெருமைபெற்றவன் என்ற செங்குட்டுவனின் பல்வேறு சிறப்புக்களையும், நோய் தபு நோன் தொடை என்ற, ஒரு தொடரே புலப்படுத்திய

55