பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப் பால், இப்பாட்டிற்கு அத்தொடரே பெயராய் அமைந்துளது.

4.

10

15

20

நிலம் புடைப்பன்ன ஆர்ப்பொடு, விசும்பு துடையூ வான்தோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப், பெரிய வாயினும் அமர் கடந்து பெற்ற அரிய என்னது, ஒம்பாது வீசிக், கலம் செலச் சுரத்தல் அல்லது, கனவினும் களைகஎன அறியாக் கசடு இல் நெஞ்சத்து ஆடுநடை அண்ணல்! நிற்பாடுமகள் காணியர்! காணலியரோ நிற்புகழ்ந்த யாக்கை, முழுவலிதுஞ்சும் நோய்தபு நோன் தொடை, நுண்கொடி உழிஞை வெல்போர் அறுகை சேனன் ஆயினும், கேள் என மொழிந்து புலம் பெயர்ந்து ஒளித்த களையாப் பூசற்கு அரண் கடாவுநீஇ, அணங்கு நிகழ்ந்தன்ன மோகூர் மன்னன் முரசங் கொண்டு நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல்தடிந்து முரசுசெய முரச்சிக் களிறுபல பூட்டி ஒழுகை உய்த்தோய்! கொழுவில் பைந்துணி வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை கவலை கவற்றும் குரால் அம் பறந்தலை முரசுடைத் தாயத்து அரசு பல ஒட்டித் துளங்குநீர் வியலகம் ஆண்டு இனிது கழிந்த மன்னர் மறைத்த தாழி ് . வன்னி மன்றத்து விளங்கிய காடே’’ . துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகுவண்ணம்

தூக்கு: செந்துக்கு பெயர் : நோய்தபு நோன் தொடை

56