பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம் பெரும்கடனம் எனக்கூறி, புலம் பெயர்ந்து ஒளித்த களையாப் பூசற்கு= நாடு விட்டே ஓடி ஒளிந்து கொள்ளக் காரணமாய் இருந்த தோல்வியால் ஆன, துடைக்க மாட்டாப் பெரும் பழியைத் துடைத்தற் பொருட்டு. மோகூர் மன்னன் அரண்கள் அணங்கு நிகழ்ந்தன்ன கடாவு மீஇ = மோகூர் மன்னனும் பழையனுக்கு உரிய மோகூர் அரண்களை அணங்கால் அழிவுற்றது போலும் அழிவுடையதாக அழித்து. முரசம் கொண்டு=அவன் போர் முரசையும் கைப்பற்றிக் கொண்டு. நெடுமொழி பணித்தவன்=தான்் கூ று ம் வஞ்சினங்களை வழுவாது முடித்துக் காட்டவல்ல வீரனாகிய அவனுக்கு உரியதான் வேம்பு முதல் தடிந்து=காவல் மரமாம் வேம்பினை வேரோடு வெட்டிச் சாய்த்து. முரசு செய முரச்சி=போர் முரசு பண்ணுதற்கு ஏற்பத் து ண் டி த் த அம்மரத்து துண்டங்களே. களிறு பல பூட்டி ஒழுகை உய்த்தோய்=அவன் போர்க்களிறுகளையே வரிசையாகப் பூட்டி வரிசையாக ஈர்த்துக் கொண்டு சென்ற, .ெ கா ற் ற ம் மிக்கவனே ! நின்புகழ்ந்த யாக்கை முழுவலிதுஞ்சும் ேநா ப் த பு நோன்தொடை= உன்னுடைய, பலரும் புகழ்ந்து பாராட்டிய யாக்கையாம் பேராற்றல் பொருந்தியதும், நோய்கண்டு அறியாததும் ஆகிய பெருமை வாய் ந் த உடம்பை நின் பாடுமகள் காணியர்=உன்னைப்பாடி மகிழ்விக்கும் பாடினி மட்டுமே காண்பாளாக கொழுவில் பைந்துணி=கொழுப்பு அற்ற பசிய இறைச்சித் துண்டை. வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை கவலை கவற்றும்= வைத்த இடத்தை மறந்துவிட்ட உச்சிக் கொண்டை உடைய கூகைச் சேவலின் கவலை குறித்து வருந்தும். குரால் அம்பறந்தலை= கூகைப் பெடைகளையுடைய தான் பறந்தலைக்கண். முரசுடைத் தாயத்து, அரசு பல ஒட்டி சமும்முரசு மு ழ ங் கும் செல்வ வளம் கொழிக்கும் அரசுகள் பலவற்றை அழித்து. துளங்கு நீர் வியலகம் ஆண்டு= அலையாடும் கடலால் சூழ்ந்த பெரிய உலகை

58