பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயலாது என்பதறிந்து, அவன் பெருமையைப் பலபடப் பாராட்டுவராயினர்.

வேந்தர் பெறும் வெற்றியெல்லாம் அவ்வேந்தர்தம் வீரர்கள் ஆற்றும் அரும்போர் விளைவாம். அவர்தம் அரிய போர் ஆ ற் ற ல், வேந்தர்கள் அவர்களுக்கு வழங்கும் வாழ்க்கை வளத்தைப் பொறுத்துளது என்பதறிந்து, ஊன் குழையச் சமைத்த சோற்றினையே அவ்வீரர்களுக்கு வேந்தர்கள் வழங்குவர் எனக் கூறும் பாராட்டுரையில், அச் சோறு, ஊன்வேறு, சோறு வேறு எனப் பிரித்துக் காணப் படாதவாறு குழையச் சமைத்த சோறு என்றும், அரசர்க்கு ஆக்கிய அடிசில் வேறு; அவன் வீரர்க்கு ஆக்கிய அடிசில் வேறு என வகை செய்யாது, வேந்தர்க்கு ஆக்கியதே வீரர்க்கு ஆக்கியதும் ஆம் என்ற வகையில், சமைத்த சோறு, எனும் இரு பெரும் பொருள்நயங்கள் ஒருசேரத் தோன்றக் கூறியுள்ள நலத்தால், இப்பாட்டு, ஊன்துவை அடிசில் எனும் அத் தொடரால் பெயர் பெறுவதாயிற்று.

5. பொலம்பூந்தும்பை, பொறிகிளர் தூணி

புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின், நொசிவுடை ിൽിങ്, நொசியா நெஞ்சின், களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின்

5 விழுமியோர் துவன்றிய வன்கண் நாட்பின்

எழுமுடி மார்பின் எய்திய சேரல்! குண்டுகண் அகழிய மதில்பல கடந்து பண்டும் பண்டும் தாம் உள்ளழித்து உண்ட நாடுகெழு தாயத்து நனந்தலை அருப்பத்துக்

10 கதவம் காக்கும் கனையெழுவன்ன,

63