பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஈதல், இசைபட வாழ்தல், அதுவல்லது ஊதியம். இல்லை உயிர்க்கு; உரைப்பார் உரைப்பவை எல்லாம், இரப்பார்க்கு ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்' என வள்ளுவர் வழங்கிய வாய்மையின் வன்மையினை உணர்ந்தவன் நம் ஊராளும் செங்குட்டுவன். அதனுல் இமயவரம்பன் ஈன்ற கான்முளை, இளங்கோவின் உடன்தோன்றல்; இளங்கோ வேண்மாளின் இன்னுயிர்க் காதலன் என்பன போலும் பிறந்தகுடியாலும், சீத்தலைச் சாத்தனரின் சிந்தை கவர்ந்தவன்; பரணர் பாராட்டைப் பெற்றவன் என்பன போலும் பெருமைக்கு உரியவனுக்கும் பேரறிவுத் திறத்தா லும், கங்கை கடந்து கனகவிசயரை வென்றவன்; கடலைக், கடந்து கடம்பரைக் கொன்றவன் என்பனபோலும் கொற்றத் தாலும் தன்னை, வந்தடைவது, வான் அனைய பெரும்புகழாம் என்ருலும், அவற்ருல் ஆம் புகழ் எல்லாம், உண்மைப் புகழ் ஆகா; வறியோர்க்கு வழங்குவதால் பெறலாகும் கொடைப் புகழே குறைவிலா நிறைபுகழாம்; கேடிலா நெடும் புகழ்ாம் என உணர்ந்து, தன் புகழைப் பாணர்கள் பாடவேண்டும; அப்பாடற் பொருட்கேற்ப விறலியர் ஆடவேண்டும்; அத்தகு பாடலும் ஆடலும் அளவிறந்து பெருக வேண்டும்; ஆகவே அவைபுரியும் பாணர்க்கும் விறலியர்க்கும், அவர் விரும்பும் வான்பொருளை, வாரி வாரிவழங்க வேண்டும் எனக், கொடைப் புகழ் வேட்கையுடையவனாய்க் கிடந்து, தன் நாளோலக்கப் பேரவைக்கு, நாள்தோறும் வந்து, தன் பெருமை பாடும் பாணர்க்குப் பொன்னல் பண்ணிய தாமரைப் பூக்களைத் தலை யில் சூட்டுவன்; விறலியர்க்குப் பொன்னரி மாலைகளை அணிவிப்பன்: வாழ்க! அவன் வளமார் பெரும் புகழ்!” என்பாரும், 'பாடியும் ஆடியும் தன் புகழ்பரப்பும் பாணர்க்கு விறலியார்க்கும் வாரி வாரி வழங்க மட்டுமே அறிந்தவன் அல்லன் செங்குட்டுவன்; வழங்கத் தெரிந்திருந்த அவன், அவ்வாறு இடையருது-வழங்கத் தேவைப்படும் வளத்தைத்,

80