பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பேரெழில் வாழ்க்கை

எல்லா நாடுகளிலும், ஆறுகள் உள என்ருலும், சேர நாட்டு ஆறுகளுக்குப் பிறநாட்டு ஆறுகளுக்கு இல்லாத பெருமை ஒன்று உண்டு, பிறநாட்டு ஆறுகள் எல்லாம், தொடக்கமும் முடிவும் ஆகிய தம் வாழ்க்கை அனைத்தையும் தாம் பாயும் அத் தனியொரு நாட்டிலேயே பெற்றிருப்பதில்லை. தோற்றம் ஒரு நாட்டில், ஒட்டம் பிறிதொரு நாட்டில், முடிவு மற்றொரு நாட்டில் என அமைவது, அவற்றிற்கெல்லாம் பொது இயல்பாம். அதனுல் அவையும், அவை பாயும் நாட்டாரும் அடையும் குறைபாடுகள் பற்பல. அத்தகு குறைபாடு அற்றவை சேரநாட்டு ஆறுகள். அவை தோன்றுவதும் அந்நாட்டு மலைகளிடத்தில்; அவை சென்று கலப்பதும் சேர நாட்டிற்கு உரிமை பெற்ற கடலில். அத்தகு தனிப்பெருமை பெற்ற பேராறுகளில், காஞ்சியம் பேராறும் ஒன்று. சேரநாட்டுத் தலைநகர்க்கு அணித்தாக ஒடும் அவ் யாறு, பிறிதொரு வகையாலும் சிறந்து விளங்கிற்று. ஆற்றில் வேனிற் புதுப்புனல் வருங்கால், மன்னனும் மக்களும் தம் மாநகர் விடுத்துச் சுற்றம் சூழச் சென்று, ஆற்றின் இருகரை மருங்கிலும் உள்ள மலர்ச் சோலைகளில் தங்கி, உண்டும் தின்றும், புதுப்புனல் புகுந்து ஆடியும் பாடியும், அகம் மகிழ் தற்கு வாய்ப்பளிக்கும் வகையில் புனலாட்டுவிழா ஆண்டு தோறும் நடப்பது வழக்கமாம்.

மலைநாடு புகுந்து மன்னன் போற்ற வாழ்ந்திருந்த பாணரும், புது ப் பு ன ல் விழாக்காணக் காஞ்சியாற்றங்கரைக்குச் சென்றிருந்தார். சென்றவர், விழாக் குறித்து ஆங்கு வந்து குழுமியிருக்கும் மக்களிடையே புகுந்து, ஒன்று கலந்து உண்டும் உரையாடியும் வருங்கால், மக்கள், விழா நிகழ்ச்சி களால் மனம் நிறை மகிழ்வெய்திருக்கும் அந்நிலையிலும் மன்னனை மறவாது, அவன் புகழே புகல்வது கண்டார்.

79