பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெருவில்-காற்ருல் அலைக்கப்படும் கொடிகள் ஆடும் தெரு. வின்கண். சொரி சுரை=நெய் சொரியப்படும் சுரையின்கண். கவரும் நெய் வழிபு உராலின் = எரிக்கப்படும் நெய் நிறைந்து வழியுமாறு பெய்து நிரப்புதலால். பாண்டில் விளக்கு= பாண்டில் விளக்குகளின். பரூச்சுடர் அழல=பருத்த திரியில் ஏற்றிய அழலானது பேரொளி செய்ய. நன்னுதல் விறலியர் =நல்ல நுதல் அழகு வாய்ந்த ஆடல் மகளிர். ஆடும்= கூத்தாடும். தொல் நகர் வரைப்பில்=மிகப்பழைய மாளிகை. களைக் கொண்ட அவன் நாட்டுப் பேரூர்களில். அவன் உரை ஆன=அவன் புகழ்பாடும் தொழில் இடைவிடாது நடைபெறு கிறது.

செங்குட்டுவன், தன் வாழ்நாள் முழுவதையும், போர்க்கள வேள்வி செய்தே கழித்தவன்; அவன் போர்வேட்கை என்றும் தணியாத ஒன்று என்பதைப், பரணர், இப்பாட்டில் வைத்து அட்டு ஆணுனே’’ என விளக்குவது போலவே, செங்குட்டுவன் உடன் பிறப்பாம் இளங்கோவடிகளாரும், அவன் ஐம்பது ஆண்டு நிறைவு எய்தியபோதும், போரே விரும்பியிருந்த நிலையை அவனுக்கு எடுத்துக்கூறி, அது கைவிடுமாறு அறிவுரை கூறியுள்ளார்.

  • வையம் காவல் பூண்ட நின் நல்யாண்டு ஐயைந்து இரட்டி சென்றதன் பின்னும் அறக்கள வேள்வி செய்யாது, யாங்கனும் மறக்களவேள்வி செய்வோ யாயின’’

-சிலம்பு : 281 ; 128.131.

78