பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்க்கப் பெற்ற மங்கை நல்லாள் ஆவள் என்ற சொற். பொருளிலேயே அடங்கியுளது. ஆ த லி ன், அப்பொருள் உணர்த்தும் நன்னுதல் விறலியர் என்ற தொடரே அப்பாட்டிற்குப் பெயராய் அமைந்தது நனிமிகப் பொருத்தமாம்

6T&T's,

7. அட்டு ஆளுனே குட்டுவன் ; அடுதொறும்

பெற்று ஆளுரே பரிசிலர் களிறே; வரைமிசை இழிதரும் அருவியின், மாடத்து வளிமுனே அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில்

5 சொரி சுரை கவரும் நெய்வழிபு உராலின்,

பாண்டில் விளக்குப் பருஉச்சுடர் அழல நன்னுதல் விறலியர் ஆடும் தொன்னகர் வரைப்பின் அவன் உரை ஆளுவே.

துறை: செந்துறைப்பாடாண் பாட்டு வண்ணம்: ஒழுகு வண்ணம் துரக்கு: செந்தூக்கு பெயர்: நன்னுதல் விறலியர்

இதன் பொருள்:- குட்டுவன் அட்டு ஆன்ைதுசெங் குட்டுவன், பகைவர்களை அறவே அழித்து வெற்றி கொண்டும் போர் வே ட் ைக தணித்திலன்; அடுதொறும் = அவன் அவ்வாறு வெற்றி கொள்ளும் தோறும். பரிசிலர் களிறு, பெற்று ஆளுர்=பரிசில் மாக்கள் அவன்அளிக்கும் களிறு முதலாம் பெரும் பரிசில் பெற்றும், அமைதி பெருது, அவன். பால் மேலும் பரிசில் பெறுவான் வேண்டி, அவன் புகழ் பாடு வதைக் கைவிட்டிலர். வரைமிசை இழிதரும் அருவியின்=மலை மேலிருந்து விழும் அருவிகள்போல். மாடத்து=மாடங்களின் மேலிடத்திலிருந்து, வளிமுனை அவிர்வரும் கொடிநுடங்கு

77