பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போல் தோன்றுவர் என்ப. ஆனல் அவ்வாடல் மகளோ இயற்கையாகவே பேரழகுடையவளாய் விளங்கினுள். அவள் நெற்றியில் வீசும் அ ழ கு’ப் பேரொளி ஒன்றே போதும், அரங்கின் முன் அமர்ந்திருப்பவர் உள்ளத்தை அடிமை கொள்ள. அத்துணைப் பேரழகு வாய்ந்த அவள், ஆடல் திறம் கண்டு வியந்து நின்றபுலவர், அவள் வாய் திறந்து பாடக் கேட்டதும் தம்மைமறந்து விட்டார்; அத்துணை இனிமை வாய்ந்திருந்தது அவள் குரல். அவள் இசையின் இனிமை நுகர்ந்த புலவர், அவள் பாடிய பாட்டின் பொருளை ஊன்றி நோக்கினர். அது. அ ந் ந | ட | ளு ம் செங்குட்டுவனின் சிறப்பையே உணர்த்துவதாய் அறிந்தார். அவர் வியப்பு அளவிறந்து பெருகி விட்டது.’’ என்னே இம் மன்னன் மாண்பு இரவின்பம் குறித்து நிகழும் ஆடரங்குகளிலும், ஆரணங்குகள் அவன்புகழையே பாடுகின்றனர். ஆடல்காண அமர்ந்திருக்கும் ஆயிரம் ஆயிரம் மக்களும், அவன் புகழ்பாடும் பாடல்கலைக் கேட்பதிலேயே பேரின்பம் காண்கின்றனர். அவன் உறங்கும் போதும், அவன் புகழ், ஊரரங்குகளில் உணர்வோடு பாராட்டப் பெறுகிறது. எ ன் னே அவன் பெருமை!’ என எண்ணி எண்ணி வியந்தார். அவ்வியப்பின் பயனுய் வந்தது இப்பாட்டு,

செங்குட்டுவன் புகழ் பாடுவார் ஏழை எளியோர் மட்டுமே அல்லர்; அவன் புகழ் பாடும் அப்பணியில் செல்வரும் சிறந்தாருமே முன் நிற்கின்றனர் என்ற நிலையே, அவன் புகழ்ப் பெருமையை உள்ளவாறு உணர்த்தவல்லதாம் என்ற உணர்வுடையவர் புலவர். அவ்வுணர்வோடு பாடிய அப்பாட்டில், புலவர், தம் அவ்வுணர்விற்கு உயிர்வூட்டும் கருப்பொருள், செங்குட்டுவன் புகழ்பாடும் ஆடரங்கில் நின்று ஆடுவாள், வெறும் ஆடல் மகள் அல்லள்; பேரழகின் ஒளி காலும் நெற்றி முதலாம் உறுப்பு நலம் அனைத்தும் ஒருங்கே

76