பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோறும், வேந்தன் பிறந்தநாள் என்றும், அவன் முடிபுனை நாள் என்றும், வெற்றித் திருநாள்என்றும் விழாக் கொண்டாடி ஏற்றிய கொடிகளும், இது பட்டிமன்றம், அது பாராளும் மன்றம், இது அறங்கூர் அவை, அது அறக்கூழ்ச்சாலை, இது நன்பொன் வாணிக நிலையம், அது நவமணிக் கடைகள் என்பன போலும் அறிவிப்புகளைத் தாங்கி நிற்பது குறித்தும், ஏற்றிய கொடிகளும் காட்சி அளிக்கக் கண்டுகளித்தார். வெண்ணிறத் து கி ல் க ளா ல் ஆக்கப்பெற்று, வானளாவ உயர்ந்த மாடங்களின் உச்சியில் கட்டப் பெற்றிருக்கும் அக்கொடிகள், காற்று அசைக்க அசைந்தாடிக்காட்டும் அழகினைக் கண்ணுற்ற புலவர், அக்காட்சி, தாம் வந்த வழியில் வானுற வோங்கிய மலையுச்சிகளிலிருந்து, வெண்னுரை தெறிக்க விரைந்து பாயும், வனப்புமிகு நீர்வீழ்ச்சிகளை நினைவூட்டும் தன்மையவாதல் கண்டு கழி, பேரின்பம் கொண்டார்.

கொடிக் காட்சியைக் கானும் கண்கள் களிக்க, பாட்டொலி கேட்கும் காதுகள் இனிக்க, வீதிகள் பலவற்றைக் கடந்து, இறுதியில் ஊர் மன்றை அடைந்தார் புலவர். ஆங்கு உயர்ந்த மேடைமீது அமைத்திருந்த அழகிய பந்தலின் இருபுறத்திலும், பெரிய பெரிய பாண்டில் விளக்குகள் பேரொளி தந்தவாறு எரிந்து கொண்டிருந்தன. அவ்விளக்கடியில் அமர்ந்திருந்த இருவர், அவ்விளக்கில் வார்த்த எண்ணெய் வற்றிப்போகத், திரிளிரிந்து, தீஅவிந்து போகாமை யில் கருத்துடையராய், வழிய வழிய எண்ணெய் வார்த்து வந்தனர். ஊர்மக்கள் ஒன்று திரண்டு வந்து மேடை முன் வீற்றிருக்க, விளக்கு தரும் வெளிச்சத்தால், விளக்கம் பெற்ற மேடைமீது, மங்கை நல்லாள் ஒருத்தி ஆடிக்கொண்டிருந்தாள்

காண்பவர் கருத்தை ஈர்க்கும் வகையில், தம்மை ஒப்பனை செய்து கொள்வதிேைலயே கூத்தாடிகள் வனப்புடையவர்

75