பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. நன்னுதல் விறலியர்

'அருள் என்னும் அன்பு ஈன்குழவி, பொருள் என்னும் செவ்வச் செவிலியால் உண்டு' என்ற பொன்னுரையின் பொருள் உணர்ந்தவன் செங்குட்டுவன். அதனல், தன்னைப் பாடிவரும் பரிசிலர்க்குப் பெரும்பொருள் வழங்கும் தன் கொடையறம் குன்ருது நடைபெற வேண்டுமாயின், பொருட் செல்வத்தைக் குறைவறப் பெறுதல் வேண்டும். தன் கோயிற் பண்டாரம் என்றும் நிறைந்து வழிய வேண்டுமாயின், பணிந் தொழுகும் பகையரசர்கள் தரும் திறைப் பொருளையும், பணியாத பகையரசர் மீது படையொடு சென்று, அவர் நாடுகளுட் புகுந்து கவர்ந்துவரும் களிறு முதலாம் பல்வேறு பொருள்களையும் நாள்தோறும் கொண்டு வந்து குவிந்தல் வேண்டும். ஆகவே, தன் பொருட்டு அல்லவாயினும், அப் பரிசிலர் பொருட்டாவது ஒயாப் போர் மேற்கொள்வது தன் இன்றியமையாக் கடமையாம் எ ன் ற உணர்வுடையணுய் வாழ்ந்தமையால், குட்டுவனின் கொடையறமும், அதற்குக் காரணமாய கொற்றத்திறமும் ஒரு சிறிதும் குறைவின்றி நிகழ்ந்து கொண்டிருந்தன, என்ற செங்குட்டுவன் புகழ்கேட்டு அவனை நேரில் கண்டு பாராட்டும் நினவினராய், அவன் அரசிருக்கைத் தலைநகராம், வஞ்சி மாநகர்க்கு வந்தார் புலவர் பரணர்,

பரணர் வஞ்சியுள் புகுந்த நேரம், இரவு நேரம். அந் நேரத்தில் புறநகர் கடந்து அக நகர் புக்க அவரைக், கூத்தும் பாட்டும் எழுப்பும் பேரொலி எதிர் சென்று வரவேற்க, அவ் வொலிவரும் திசைநோக்கிச் செல்லத் தொடங்கினர். அம் மாநகர் வீதிகள் அனைத்தும் வானளாவ உயர்ந்த மாட மாளிகைகளையே இருபாலும் கொண்டிருந்தமையால், அவ் வீதிகளைக் கடந்து சென்ற பு ல வ ர், மலைநிகர் மாடங்கள்

74