பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணற்ற பகைவரின் பசிய தலைகளை நசுக்கி அழிக்க. பல செருக்கடந்த = பற்பல போர்களில் வெற்றிகண்டவனும். கொல்களிற்று யானை-கொல்லும் போர்புரியவல்ல களிற்றுப் படையுடையானும். கோடு நரல் பெளவம் கலங்க வேல் இட்டு = சங்கு முழங்கும் பெரிய கடல் கலங்குமாறு தன் வேற்படைவீரர்களை விடுத்து. உ ைட தி ைர ப் பரப்பின் படுகடல் = ஓங்கி உயர்ந்து உடைந்து மறையும் அலைகளைக் கொண்ட அகன்ற நீர்ப்பரப்பாகிய ஓவென ஒலிக்கும் கடலை. ஒட்டிய=கடந்து வெற்றி கொண்ட வெல் புகழ்க் குட்டுவன் கண்டோர் = வெல்லும் புகழ் வாய்க்கப் பெற்ற குட்டுவனைக் கண்ட இரவலர். பெயர்ந்து பாடுபு செல்குவம் என்னர் = இவ்வஞ்சிமாநகரை விடுத்துப், பிறரைப்பாடி வேற்றிடம் செல்குவேம் என நினைப்பது தான்ும் செய்யார். -

73