பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறை: செத்துறைப்பாடாண் பாட்டு வண்ணம்: ஒழுகுவண்ணம் தூக்கு: செந்துாக்கு பெயர்: கரைவாய்ப் பருதி

மகளிர் பாட, மகிழ்சரத்தலின், செருக்கடந்தவனும், யானே உடையானும் ஆகிய கடல் ஒட்டிய குட்டுவன் கண்டோர், செல்குவம் என்னார் என வினை முடிவு செய்க.

இதன் பொருள்:- இழையர் குழையர் நறும் தண்மாலேயர் = இழையினையும், குழையினையும், நறுமணம் நாறும், குளிர்ந்த மாலையினையும். சுடர் திமிர் அவிர் தொடி செறித்த முன்கை = ஒளிமிக்கு விளங்கும் தொடியை இறுகச் செறித்த முன் கைகளையும், திறல் விடு திருமணி இலங்கு மார்பின்= பேரொளிகாலும் உயர்ந்த மணிமாலை மின்னும் மார்பினையும் உடைய, வண்டுபடு கூந்தல் முடிபுனை மகளிர் = வண்டு மொய்க்கும் தம் கூந் த லே க் கொண்டையாக முடித்துக் கொள்ளும் ஆடல் மகளிர், தொடை படு பேரியாழ் = இசைத் தொடை இனிது அமைந்த பேரியாழில். பாலை பண்ணி = முதற்கண் ப லே ப் பண்ளுேசையை எழிப்பிப் பின்னர், பணியா மரபின் உழிஞை பாட = பகைவரைப் பணிந்தறியா மரபோடு கூடிய, பகைவர்தம் அரண்களே முற்றித் தனதாக்கிக் கொள்ளும் நிகழ்ச்சிகளே உணர்த்தும் உழிஞைப் பண்ணேப் பாட, இனிது புறம் தந்து = அது கேட்ட செங்குட்டுவன் அம்மகளிரை நன்கு ஒம்பி, அவர்க்கு இன்மகிழ் சுரத்தலின்= அவர்க்கு இனிய மகிழ்ச்சி தரும் மாதிதிகளை வாரி வழங்குவதால், சுரம் பல கடவும்=கொடுவழி பலவற்றையும் கடந்து போகும். கரைவாய்ப் பருதி=பாைவர் குருதியால் கறைபட்ட விளிம்பினையுடைய தேர் ஆழிகள், ஊர் பாட்டு = வறிதே ஊர்ந்து செல்லும்போதே, எண்ணில் பைந்தலைதுமிய =

72

k