பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடையருது நடைபெறக் கண்டு, அவனை நாவாரப் பாராட் டும் பரணரின் பாராட்டுப் பாக்களுள் இதுவும் ஒன்று.

தான்் வாளா இருப்பவும், தன்பால், பகைவர் தாமே வந்து, தாழ்ந்து கிடப்பர் என்பதே உண்மையான வீரனுக்கு உயர்ந்த புகழ்தருவதாகும். செங்குட்டுவன் அத்தகுபுகழைச் சிறக்கப் பெற்றவனவன் என்ற பாராட்டு, போர் உடற்றும் உட்கோள் இன்றி வறிதே உருண்டோடிக் கொண்டிருக்கும் போதே, பகைவர் தாமேவந்து தன் உருளைக்கீழ் அகப்பட்டு உயிர் இழக்க, அவ்வாறு இறந்தார்தம் உடல் குருதிபடிந்தே கறைப்பட்டுக் காட்சிதரும் உருளைகளைக் கொண்டது செங் குட்டுவன் தேர்ப்படை என்ற பொருள் கரை வாய்ப் பருதி' என்ற அத்தொடரிலேயே பொருந்தியுளது ஆதலின், அப்பொருள் காட்டும் தொடரே, அப்பாட்டிற்குப் பெயராய் அமைந்தது.

6. இழையர் குழையர் நறுந்தண் மாலையர்,

சுடர்நிமிர் அவிர்தொடி செறித்த முன்கைத், திறல்விடு திருமணி இலங்கும் மார்பின் வண்டுபடு கூந்தல் முடிபுனை மகளிர்

5 தொடைபடு பேரியாழ் பாலைபண்ணிப்

பணியா மரபின் உழிஞை பாட இனிது புறம்தந்து அவர்க்கு இன்மகிழ் சுரத்தலின், சுரம்பல கடவும் கரைவாய்ப் பருதி ஊர்பாட்டு எண்ணில் பைந்தலை துமியப்

10 பல்செருக்கடந்த கொல்களிற்று யானைக்,

கோடுநரல் பெளவம் களங்க வேல்இட்டு உடைதிரைப் பரப்பின் படுகடல் ஒட்டிய வெல்புகழ்க் குட்டுவன் கண்டோர் செல்குவம் என்னர் பாடுபு பெயர்ந்தே.”

71