பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்குட்டுவனின் இவ்வெற்றிச் சிறப்புகளைக் கேட்டு அவனைக்காணும் ஆர்வம் பெருக, அவன் இருந்து ஆளும் வஞ்சிமாநகர் சென்று அவனைக் காண்பவர், "செங்குட்டுவன் சிறந்த வீரன் என்று மட்டுமே இதுகாறும் எண்ணி இருந். தோம். ஈண்டுவந்து கண்டபிறகே, அவன் சிறந்த வீரன் மட்டுமல்லன்; பெரியகொடையாளனும் ஆவன் என்பதை அறிந்தோம். இழையும் குழையும் ஆகிய அணிகளும், நறு மணம் வீசும் புதுமலர்களால் ஆன மாலைகளும் உடையராய், கையில் தொடியும், கழுத்தில் மணிமாலையும் அணிந்தும், தேன் உண்டு பழகிய வண்டுகள் விடாது வந்துமொய்க்குமாறு, தேன்துளிக்கும் புத்தம் புது மலர்களையே குடும் கூந்தலைக் கொண்டையாக முடித்தும், அதில் பூவணியும் பொன்னணியும் பொருத்தியும் தம்மை ஒப்பனை செய்துகொள்ளும் ஆடல் மகளிர், இனிய இசையெழுப்பும் பேரியாழ் ஏந்திவந்து, முதற்கண், மங்கலப்பண்ணாம் பாலைப்பண்ணை எழுப்பி இசைத்துவிட்டுப் பின்னர்ப், பற்றற்கரியன என்ற பாராட் டினைப் பெற்றனவாகிய பகைவர்தம் பேரரண்கள் பலவற்றை முற்றி வளைத்துக் கைப்பற்றுவதல்லது, பகைவர்க்குப் பணிந்து போதலைப் பார்த்தறியாச் செங்குட்டுவன் பேராண்மையைப் பொருளாகக் கொண்ட, பாடல்களைப் பாடிநிற்க, அப்பாடல் நயம்கண்டு நயக்கும் செங்குட்டுவன், அம் மகளிரை அகமும் முகமும் மலம் வரவேற்று, அருகில் இருத்தி, அவர் உளம் உவக்கும் உறுபொருள் பலவும் அளித்து, அனுப்பும் அருமைப் பாட்டினைக் கண்டோம்; ஆகவே, கொற்றத்தோடு கொடையி லும் சிறந்த குட்டுவன் அரசவை விடுத்து அகலோம் வேறிடம்; இனி இதுவே எம் வாழிடம்’ என்று கூறி ஆண்டே இருந்து விடுவர். -

செங்குட்டுவன் அவைக்களப் புலவராய் வீற்றிருக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றமையால், இதுபோலும் நிகழ்ச்சிகள்

7Q