பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டிலும் ஒருவரும் இலர், என்ற பேரும் புகழும் பெருகப் பேரரசு நடத்தி வந்தான்் செங்குட்டுவன்.

செங்குட்டுவன் இவ்வாறு சிறந்து விளங்கவே, அவனைப் பகைத்து வாழ்பவர் இவ் அவனியில் ஒருவரும் இலராயினர். ஆனால், களம் பல கண்டு கடும்போர்புரிந்து பழகிய கட்டிளங் காளையராகிய அ வ ன் வீரர்கள், வினே முடங்கிக்கிடக்க இயலாராயினர். போர் வேட்கை கொண்டலையும் உள்ளமும் தினவெடுக்கும் உடலும் உடையராய்ப், பெரும்போரை எதிர் நோக்கிக் காத்துக்கிடந்த அவர்க்குக், கிடைத்தற்கரிய வாய்ப்பு ஒன்றும் வந்து புகுந்தது.

கடலிடைத் தீவுகளை வாழிடமாக் கொண்ட, தம்மை அணுகச் செங்குட்டுவனுலும் ஆகாது என்ற அறியாமையொடு பட்ட ஆணவ மிகுதியால், கடம்பர் எனும் கடற்கொள்ளைக் கூட்டத்தவர், சேர நாட்டு வணிக வங்கங்களை வழிப்பறி செய்யத் தலைப்பட்டனர். அது கே ட் ட செங்குட்டுவன், அக்கணமே அவர்மீது போர்தொடுத்து விட்டான். சங்கு களின் முழக்கொலி ஒயா, அப்பெருங்கடல் நீரும் கலங்கிச் சேருகுமாறு தன் வேற்படைவீரர்களை அவர் மீது ஏவினன். மலைபோல் எழுந்து மடியும் பேரலைகளையும், எல்லே காண்டற்கு இயலாவாறு விரிந்து அகன்ற பரப்பினையும் உடையதான் கடல் அளிக்கும், இயற்கைஅரண் உடைமையினலேயே, கடம்பர் அழிவுத்தொழில் மேற்கொண்டனர்; ஆகவே அக்கடல் அரணை, இல்லை ஆக்குகிறேன் எனச் சூளுரைத்துச் சேர நாட்டுக் கடற்படையால் அதைச் செய்து முடித்தான்், கடலை ஒரு பொருட்டாக மதியாது கடந்து போய்க் கடம்பர்களை வென்று அழித்தமையால், செங்குட்டுவன், கடல் பிறக்கு ஒட்டிய செங்குட்டுவன் எனும் சீர் மிகு சிறப்பினைப்பெற்ருன்.

69