பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கரை வாய்ப் பருதி

ஆண்மையும், ஆற்றலும், அவற்றை ஆக்கம் மிகும் வகை யில் செயல்படுக்கும் அறிவும் ஒருங்கே வாய்க்கப் பெற்றிருந்த செங்குட்டுவன்பால், நன்கு தேர்ந்த நாற்படையும் இருந்தது. நாற்படை வரிசையுல் முதற்கண் நிற்பதாய அவன் தேர்ப்படையின் திண்மை சொல்லும் திறம் உடையதன்று. பகை நாடு, காடும் மலையும் மடுவும் மணலும் இடையிட்ட கொடு வழிகளுக்கு அப்பாற் பட்டது என்ருலும், அக்கொடுவழிகளில் கேடுற்றுப் போகாது, அ வ ற் ைற எளிதில் கடக்கவல்ல திண்மை வாய்ந்தது. போர்க்களத்தில், இனிப் போக இயலாது என எண்ணுமளவு, பகைவர் படைகள் இடையிட்ட பகுதியின் அருமைப் பாட்டினை அழித்து, விரையும் வன்மை யுடையது. தேர்ப்படையின் திறம் அத்தன்மைத்தாம் என்றால், தேர்ப்படையை அடுத்து நிற்பதாய களிற்றுப்படையின் களப்போர்த்திறம், அதனினும் சிறப்புடைத்தாம். தன்முன், பகைவர் படையைச் சேர்ந்த கரிகளோ, பரிகளோ, காலாட்களோ எவைவரினும், எத்துணையவரினும், எல்லாமேவரினும், கொன்று உயிர்போக்கும் கொடுமையுடையது அக்களிற்றுப்படை, அது களம்புகக் கண்டதும் அஞ்சி நடுங்கும் பகைவர் படைகள், அவ்வச்ச மிகுதியால் எத்திசையில் ஓடினுல் உயிர் பிழைக்கலாம் என்ற அறிவினையும் இழந்தனவாகி, அக் களிற்றுப்படைக்குப் பின்னக, வறிதே ஊர்ந்து வரும், தேர்ப்படையின் உருளைகளுக்கு இடையே அகப்பட்டு உயிரிழந்து போகும். அதுபோலும் நிகழ்ச்சிகளால் உயிரிழந்தவரின் உடற்குருதி படிந்தே, அவ்வுருளைகள் கறைபட்டுவிடும். அத்தகு நாற்படை, தன்பால் அளவின்றி இருந்தமையால், தன்னைப் பகைப்பவரோ, தனக்குப் பணிய மறுப்பவரோ, இக்கன்னித் தமிழ்நாட்டில் மட்டுமன்று, க ட ல் கடந்த

68