பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லது அம்பு. புற்றுக்கும் துணிக்கும், அரவுக்கும் அம்புக்கும் உள்ள இந்த ஒற்றுமை கண்டு, 'துாணிப் புற்றடங்காவின் ஒடுங்கிய அம்பு’’ என உவமை கூறியநயம், பாராட்டற். குரியது.

வில் எத்துணைவளைகிறதோ, அத்துணை விரைவாக, அம்பேயவல்லது. ஆகவே, அத்துணையும் அதற்குச் சிறப்பு. ஆனால், உள்ளம், எதற்கும் வளைந்து கொடுக்காது,எந்த அளவு நிமிர்ந்து நிற்கிறதோ, அந்த அளவு அந்நெஞ்சுடையார்க்குப் புகழ்சேர்க்குமாதலின், அத்துணையும் அதற்குப் பெருமை. இப்பொருட் சிறப்போடு, முரண்தொடையாம் அணிச்சிறப்பும் அமைய, நொசிவுடை வில்லின், நொசியாநெஞ்சின்’ எனச் சொல்லாட்சி புரிந்திருக்கும் சிறப்பு சிந்தைக்கு விருந்துாட்டுவதாகும்.

ஏணி, எல்லை என்னும் பொருளுடையதாதல், நளி இரும் முந்நீர் ஏணியாக (புறம்: 35) 'மால்விசும்பு ஏணி’’ (சிலம்பு 23:165) என்ற வரிகளாலும் புலகுைம். -

பாய்ந்து வரும் பகைவரின் குதிரைப் படையைத் தடுத்து நிறுத்த, நகரைச் சுற்றி முள்வேலி இடுவது, போர்முறையாம் என்பது, 'இனநன்மாச் செலக் கண்டவர் கவைமுள்ளின் புடை அடைப்பவும்’ என்ற பு ற ந னு ற் று வரியாலும் தெளிவாம் (புறம்: 98). - . . .

'மழை கொளக் குறையாது. புனல்புக நிறையாது' என்ற தொடர், மழை கொளக் குறையாது புனல்புக மிகாது என மதுரைக் காஞ்சியிலும் ஆளப்பட்டிருப்பது காண்க, (மதுரை: 424). *

67