பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திண்ணியதோள்களை, உயர ஒச்சி=உயரத்துக்கி, பிணம் பிறங்கு அழுவத்து=பிணங்கள் மலிந்த போர்க்களத்தில், துணங்கை ஆடி=துணங்கைக் கூத்து ஆடியும். சோறு வேறு என்ன=சோறு வேறு, கறிவேறு எனப்பிரித்துக் காணுதபடி. ஊன்துவை அடிசில்=ஊன்குழைய ஆக்கிய சோற்றுதிரளை. ஓடாப்பீடர் = தோற்றுப் புறங்காட்டி ஓடாப் பெருமையுடைய வீரர்கள். உள்வழி இறுத்து=உள்ளம் விரும்பும் வகையில் வாரி வழங்கியும். முள் இடுபு அறியா ஏணி=உட்புகும் பகைவர்:ஒ ரு வ ரும் இன்மையால் முள் இட்டுக் காத்தலை அறியாத எல்லைகளையும், தெவ்வர்சிலைவிசை அடக்கிய மூரி வெண்தோல்=பகைவர் வில்லிலிருந்து வெளிப்படும் கணை களின் விரைவினைப் போக்கிய வன்மை வாய்ந்த வெண். தோலால் ஆன கடகத்தையும் உடைய. அனைய பண்பின் தான்ே மன்னர்=அத்தகு போர்ப்பண்பு உடையவராகிய படைகளைக் கொண்ட மன்னர்கள். நின் முன்னும் இல்லை= நினக்கு முன்னும் பிறக்கவில்லை, இனியார் உளரோ= இனிப் பிறப்பவர்தாம் எவரேனும் உளரோ? இல்லை.

தன்னைக் காண்பவர்களை இதனுள் எத்தனை பாம்புகள் அடங்கியுள்ளனவோ? என்னென்ன பாம்புகள் அடங்கியுள்ளனவோ என ஐயுற்று நடுங்க வைப்பது புற்று. அது போலவே, வீரன் முதுகில் தன்னைக்காணும் பகைவரை, இதனுள் எத்தனை அ ம் புக ள் அடங்கியுள்ளனவோ? என்னென்ன அம்புகள் அடங்கியுள்ளனவோ? என எண்ணி எண்ணி நடுங்க வைப்பது அம்பருத்துரணி. புற்றிலிருந்து வெளிப்பட்டதும், எதிர் நிற்பார் மீது சீறிப்பாய்ந்து கடித்து நஞ்சு கக்கி அவர் உயிரைத்தப்பாது போக்கவல்லது அரவு, அதுபோலவே அம்பருத்துணியிலிருந்து வெளிப்பட்டு, வில் வளைத்து நாணேற்றி விடப்பட்டதும், பகைவர்மீது தப்பாது பாய்ந்து அவர் மார்பைத் துளைத்து, அவர் உயிர் குடிக்க

66