பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புற்றடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின் = புற்றின்கண் அடங்கி யிருக்கும் அரவேபோல், துணியின் கண் அடங்கியிருக்கும் அம்புகளையும். .ெ நா சி வு ைட வில்லின் = வேண்டுமளவு வளைந்து கொடுக்கும் வில்லினையும், நொசியா நெஞ்சின்தளரா நெஞ்சினையும். களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின்=களிறுகளைக்கொன்று குவித்தலால் முனை மழுங்கிப்போன வேலினையும் உடைய, விழுமியோர் துவன்றிய= சிறந்த வீரர்களே திரண்ட, வன்கண் நாட்பின் = கொடுமைக்கு இடமாகிய போர்க்களத்தில். எழுமுடி மார்பின் எய்திய சேரல்=ஏழரசர்களைவென்று, அவர்களின் ஏழு முடிகளைக் கவர்ந்து அழித்துப் பண்ணிய ஆரத்தை மார்பில் அணிந்து கொண்ட சேரன் செங்குட்டுவனே! மழைகொளக் குறையாது =மேகங்கள் படிந்து நீர் பருகியபோது குறையாமலும். புனல் புக நிறையாது=ம ைழ .ெ வ ள் ள ம் வந்து புகுந்தபோது மிகாமலும். விலங்கு வளிகடவும்=எதிர்ப்படும் பொருள்களைத் தடுத்துமோதும் காற்று வீசுவதால், துளங்கு இரும் கமஞ்சூல் =அசையும் இயல்புடையதான் பரந்த நீர் நிலையான, முழங்கு திரைப் பனிக்கடல் = ஒயாது ஓலமிடும் அலைகளையுடைய குளிர்ந்த கடல் இடத்தே. வயங்குமணி = இமைப்பின் வேல் இடுபு= விளங்குகின்ற மாணிக்க மணிபோலும் ஒளியுடைய வேற்படையைச் செலுத்தி மறுத்திசிளுேர்-அக்கடல் வாழ் பகைவராம் கடம்பர்களை வென்று அழித்தவர். குண்டு கண் அகழிய மதில் பல கடந்து=ஆழ்ந்த அகழிகளையுடைய மதில்கள் பலவற்றைக் கைப்பற்றி, பண்டும் பண்டும்=முன்னர்ப் பலமுறை. தாம் உள் அழித்து உண்ட=உட்புகுந்து அழித்து உண்ட. நாடு கெழு தாயத்து = நாடாட்சிக்கு உரிய நல்ல நிதியாகிய நனந்தலை அருப்பத்து=அகன்ற அகத்திடத்தை யுடைய அரண்களின் கதவம்காக்கும் கணையெழு அன்ன=

வாயிற்கதவுகளைக் காக்கும் கணைய மரங்களை ஒக்கும். நிலம்பெறு திணிதோள்=பகைவர் நாடுகளை வென்று தமவாக்கும்

5 65