பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

முல்லைக் கொடி", "நெய்தற் கன்னி" என்ற ஐந்து தலைப்புக்களிலும், முப்பத் ஆண்டுகளுக்கு முன்பே விளக்கி வெளியிட்டேன். - -

பழந்தமிழர் தொகுத்த்ளித்த வரிசையிலேயே அவ் வெட்டுத் தொகை நூல் விளக்கங்களையும் அளிக்க வேண்டும் என உள்ளrம்' விரும்பினாலும், சில பல காரணங் களால், அவ்வரிசை வழிச் செல்ல இயலாமல் போய்விட்டது. இப்போது, அவ்வரிசையுள் நான்காவதாக நிற்பதும், 'ஒத்த பதிற்றுப் பத்து” என்ற பாராட்டினைப் பெற்றிருப்பது மாகிய பதிற்றுப் பத்தின் விளக்கத்தினை அளிக்க எண்ணினேன். , - - .

ஒவ்வொரு தொகுப்பிலும் பத்துப் பத்துப் பாக்களைக் கொண்ட, பதிற்றுப்பத்தில், முதல் தொகுப்பும், பத்தாம் தொகுப்பும் கிடைத்தில; ஆகவே எஞ்சியுள்ள எட்டுத் தொகுப்புகளின் விளக்கங்கனையே அளிக்க முடிந்தது. அவ்வாறு அளிக்கும் நிலையில், ஒவ்வொரு பத்திலும் உள்ள பத்துப் பத்துப் பாக்களை யும் பயின்று, ஒவ்வொரு பாவிலும், அப்பாவிற்குப் பெருமை சேர்க்கும் சிறு தொடரை அப் பாட்டின் தலைப்பா கே. இத்து பெருமை ச்ெய்துள்ளார். கள், நம் பண்டைத் தமிழ்க் சான்றோர்.

அவ்வாறு, அவர்கள் சூட்டியிருக்கும் பெயர்களில் ஒவ் வொரு பத்தின் விளக்கத்திற்கு, அப்பத்தின் முதற் பாட். டிற்குச் சூட்டியிருக்கும் பெயரையே, அப்பத்துப் பாட்டின் விளக்கத்திற்குப் பெயர் சூட்டும் முறையினைப் பின்பற்炒 இரண்டாம் பத்தின் விளக்கத்திற்கு புண் உமிழ் குருதி' என்ற பெயரையும், மூன்றாம் பத்தின் விளக்கத்திற்கு 'அடு நெய் ஆவுதி' என்ற பெயரையும், நான்காம் ப த்தின் விளக்கத்திற்கு. கமழ் குரல் துழாய்' என்ற பெயரையும், ஐந்தாம் பத்தின் விளக்கத்திற்கு "சுடர் i வேங்கை' என்ற