பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 - புலவர் கா. கோவிந்தனார்

களை பாடி மகிழ்ந்தார் கபிலர். கபிலருக்கு பெரும் பரிசில் பொருட்களை அளித்து சிறப்பு செய்தான் செல்வக் கடுங்கோ. கபிலரை அழைத்துக் கொண்டு நன்றா என்ற குன்றின் மீது ஏறி நின்றான். அங்கிருத்து காண்பார் கண்ணிற்குப் புல்ப்படும் நாடுகள் எவ்வளவுண்டோ அவ்வளவையும் அவர்க்கு அளித்தான். பிறபுலவர்கள் பாராட்டும் சிறப்புடையவர் கபிலர். -

"செறுத்த செய்யுள் செய் செந்நாவின் வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்' என இளங்கீரனார் அவரைப் பாராட்டுகிறார். நப்பசலையார் இவரை,

"புலனழுக்கற்ற அந்தணாளன்” எனவும்,

'பொய் யாநாவில் கபிலன்' எனவும்

பாராட்டுகிறார் என்றால் அவர்.

பெருமைதான் என்னே!