பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுடைத் தலைவன்

தமிழ்நாடு மிகப் பழைய காலமாகவே. சேர், சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. செந்தமிழ் வேந்தர் மூவேந்தருள், சேரர் சிறந்தவராவர் என்ற கொள்கை, பழங்கால மக்களிடையேயும், அக்காலப் புலவர்களிடையேயும் நிலவியிருந்தது. சேரர், சோழர், பாண்டியர் என, அவர்கள் வழக்கின் கண் முதற்கண் வைத்து வழங்கப் பெறுதலேபோல், 'போந்தை, வேம்பே, ஆர் என வருடம் மாபெருந்தானையர்’ (தொல், பொருள். புறத் திணை : 5) என அவர்கள் மாலை, முதற்கண் வைத்துச் செய்யுட்கண் வழங்கப் பெறுதல் அறிக.

தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை எனும் தலைமகனைப் பெற்ற பெறற்கரும் பேறுடையான் செல்வக் கடுங்கோ வாழியாதன். செல்வக் கடுங்கோவைப் பாடிய புலவர்கள் கபிலரும், குன்றுகண்பாலியாதனாரு மாவர். எண்ணியது எண்ணியாங்கி முடிக்கும் திண்ணிய உள்ளம் உடையவன் அவன். உலக அரசர் எல்லாம் தன் ஏவல் வழி நிற்க வேண்டும். உலகனைத்தும் தன் ஒரு

குடைக்கீழ் வரல் வேண்டும் என விரும்பினான். விரும்பிய

தோடு நின்றானல்லன். அதைச் செயல்படுத்தியும் காட்டினான். இச்சிறப்பைப் பாராட்டிப் புகழ்கின்றார்,' கபிலர். , , ,