பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1% புலவர் கா. கோவிந்தனார்

“வையங் காவலர் வழி மொழிந்து ஒழுகப் பேகம் வேண்டிப் பொதுச் சொல் பொறா அது ஒடுங்கா உள்ளத்து: ஒம்பா ஈகைக் *

கடந்தடு தானைச் சேரலாதன்'

புறம் : 8

கடுங்கோ வாழியாதன் ஒரு குணக்குன்று: பாராட்டற் குரிய பண்பு பல் நிறைந்தவன் அவன் பகைவரைப் பணிந் தறியாம் பேராற்றல் உடையனாய செல்வக்கடுங்கோ. பா ப்யார் போலும் பெரியாரைப் பணிந்தொழுகும் பண்புடையனாவன்; அஞ்சாமை நிறைந்தது அவன் உள்ளம் ஆயினும் அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்பதை அறிந்த வன்ாதலின், நண்பன் அறிவுரை கண்டு அஞ்சும் அறிநெறி யுடையனாவன். இப்பண்புகளைப் பாராட்டுகிறார் கபிலர்.

'பார்ப்பார்க்கல்லது பணிபு அறியவையே; பனியா உள்ளமொடு அணிவரக் கெழீஇ நட்டோர்க்கல்லது கண்ணஞ்சலையே

பதிற்றுப் : 63

செல்வக் கடுங்கேர் சிறந்த கொடையாளனாவன்; பாரி யின் பெருநண்பரர்ய கபிலரே, அவன் கொடைச் சிறப்பைப் பாராட்டுகின்றார். அந்த னர் க் கு அருங்கலங்களை அளிக்குங்கால் அப்பொருளோடு வர்ர்த்த நீர் ஓடியே அவன் அரண்மனை முற்றம் சேறுபடும, தன் புகழ் பாடி வரும் சுத்தர் முதலியோர்க்கு, தன் ஏவலரை விளித்து, அவர்க்குக் குதிரைகளையும், தேர்களையும் அணி பல அணிவித்து அளித்து அனுப்புக' என ஆணையிடும் அருள் உள்ளம். உடையவன் எனப் பலப்பல கூறிப் பாராட்டுவாராயின் அவன் கொடைப் பெருமையினைக் கூறவும் ஒண்னுமோ!