பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. புலா அம் பாசறை

ஒரு கொற்றவனை, ஒரு கொடை வ ள்ளலைக் கபிலர், பாடிப் பாராட்டிவிட்டால், அத ற்குமேல் அவனைப், பிற புலவர் எவரும் பாராட்டுவது இயலாது. அவன் கொற்றம் கொடைப் பெருமைகளை, அத்துணை முழுமையாகப் பாராட்டிவிடும் பெரும் புலவர் அவர், அவர் காலத்தே வாழக் கொடுத்து வைக்காத காரணத் தால், கபிலரின் பாராட்டைப் பெற்றுப் பெருமை கொள்ள இயலாது போன கொற்றவர்கள்.

ஃஅந்தோ கபிலர் இன்றிருந்தால் எத்துணைப் பெரு நலமாம்” என எண்ணி உள்ளம் வெதும்புவர்.

சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை, பொருள் செறிந்த பாவியற்றும் நாநலமும், சிறந்த கேள்விச் செல்வமும் இவ்விரு நல்முடைமையால் உலகெலாம் போற்றும் பெரும் புகழும் வாய்ந்த கபிலர் இன்றிருந்தால், எத்துணை நலமாம்? அந்தோ அது நான் பெற்றிலனே'. என ஏங்கிப் பெருமூச்சு விட்டதைக் காட்டிக், கபிலர் புகழ் பாடியுள்ளார் புலவர் பெருந்தில் இளங்கீரனார். -

கபிலரின் இப்பெருஞ்சிறப்பை, அவரால் பாராட்டப் பெறும் கொற்றவர்கள், இவ்வாறு கூறிப் பெருமை செய்வது மட்டுமில்லாமல், கபிலரின் அளக்கலாகாப் புலமை நலத்தைப் பொற்கட்டிகளை ஏற்றி வரும், கடலோட