பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. புல்வர் கா. கோவிந்தனார்

வல்லு பெரிய நாவாய்கள் நுழைந்து விட்ட துறைக்குள், பிற பண்டப் பொதி ஏற்றிய சிறு சிறு கலங்கள் செல்வது எவ்வாறு இயலாதோ அதேபோல், கபிலர் பாடிப் பாராட்டி விட்ட ஒருவனைப் பிற புலவர்கள் பாராட்டுவது இயலாது'2 என மாறோக்கத்து நப்பசலையார் போலும் புலவர் பெரு மக்களும் பாராட்டியுள்ளனர். - அத்தகு பெரும் புலவர் கபிலர்: அவரால் பாராட்டப் பெற்றவர், செல்வக்கடுங்கோ வாழியாதன், பறம்பிற் கோமான் பாரி, மலையமான் திருமுடிக்காரி, வேளாவிக் கோமான் பெரும்பேகன், எனப் பல்ராயினும், அவரால் பெரிதும் பாராட்டப்பெற்றவன், அவர் தம் ஆருயிர் நண்பன் பாரியே. .

பாரி வேள் பால் பாடிச் சென்றால், விறலி! சேயிழை பெறுகுவை' & - -

“மடவர் மெல்லியர் செலினும் கடவன் பாரி கைவண்மையன்: * உலகம் புரக்க பாரி ஒருவனே உளனல்லன்: மாரியும் உளது: “பரிசிலர் அவனையேவேண்டினும், பாரி வாரேன் என்னான்; அவர் வரையின் ஆவன்'

'பாரியின் பறம்பு மலையைத், தம் படையாற்றலால் கொள்வது மூவேந்தர்க்கும் இயலாது; பாரியும் வாள் வலிவிழந்து, அது தருவானல்லன்: -

"வேந்தர் இரவலர் போல் ஆடியும் பாடியும் சென்று :இரத்து நின்றால், பாரி, பரிசிலாக, நாட்டையும், குன்றையும்

ஒரு சேரக் கொடுப்பன்"

"முந்நூறு ஊர்களைக் கொண்டது பறழ்பு நாடு, அம் முந்நூறு ஊர்களையும், பரிசிலரே பெற்றுக்' கொண்டனர்" பறம்பு நாட்டை, வேற்படை கொண்டு கைக் கொள்வது இயலாது. ஆனால் பாடிப் பரிசில் பெறும் கினை மகள் விரும்பினால் அவட்கு, அது எளிதில் கிட்டிவிடும்'