பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 21

எனப் பாரியின் கொடைவளம், கொற்ற நலங்களைப் பலபடியாகப் பாடிப் பாராட்டி மகிழ்ந்திருந்தார் கபிலர்.

ஆனால், அந்தோ! அவர் மகிழ்ச்சியில் மண் விழுந்து விட்டது. பாரி கொல்லப்பட்டுவிட்டான். அவன் பறம்பும் பகைவர் வயமாகி விட்டது. பாரி மாய்ந்தானாகக் கலங்கிக் கைய்ற்று நீர் வார் கண்ணராகி விட்டார் கபிலர்.

வடித்தெடுத்த இனிய கள்தேறல், மலைநாட்டுக் கற்

களையும் உ ரு ட் டி ஒடுமளவு, i rr gătit tř ፳፰ነ Š ம ண் ைட யி ல், பாரி, வழிய வழியப் .ெ ப ய் த இனிய காட்சி நலன் இழந்து போன பறம்பில் நிலை நினைந்து நெடுந்துயர் உற்றார். L, tr ts

ஈன்ற பாவையர் பறம்பு மலை முகமேறி நின்று, பற்ம் பரணை முற்றி நிற்கும் மூவேந்தர்கள் கொண்டு வந்து நிறுத்திக் கிடந்த குதிரைப் படைகளை எண்ணி மகிழும் இன்பக் காட்சி கண்டு களித்த கபிலர், பாரி மறையந், தம்மோடு வந்து, தாம் தங்கியிருக்கும் சிற்றுார் புறத்துக் குப்பை மேட்டில் ஏறி நின்று, அவ்வழிச் செல்லும் உப்பு வண்டிகளை எண்ணும் துன்பக் காட்சி கண்டு துடித்துத் துவண்டு கிடந்தார்,

முதுபெரும் புலவராகிய கபிலர், இவ்வாறு முடங்கிக் கிடப்பதால் இலக்கியப் பேருலகிற்கு நேர்ந்து விட்ட இழப்பை உணர்ந்து கவலையுற்ற ஆன்ற்ோர் சிலர். கபிலரை அணுகி, புலவர் ஏறே; பாரியின் பிரிவு, பாரியைச் சேய்மைக் கண் இருந்து கண்டு வந்த எங்களுக்கே பெருந் துயர் தருகிறது என்றால், அவன் ஆருயிர் நண்பராய், அவன் வாழ்வோடு கலந்திருந்த உமக்கு, அவன் மறைவு எத்துல்ன பெருந்துயர் தரும் என்பதை அறிகிறோம். என்றாலும், அவனையே நினைந்து செயல் இழந்து கிடப்பது, தங்களைப் போலும் கற்றறிந்த பெரும் புலவர்க்கு அழகாகாது,