பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 புலவர் கா. கோவிந்தனார்

உலகம் புரப்பவன், பாரி ஒருவனே இல்லன்: மாரியும் உண்டு என உரைத்தவர் தாங்கள். கொடையாலும், கொற்றத்தாலும், பாரியினும் விஞ்சியவரைக் காண இயலாது எனினும் அவ்வகையில் அவனுக்கு ஒப்பானவர் உலகில் இல்லாமல் போய் விடவில்லை. செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற சேரர் குலச் செம்மல் ஒருவன் இருக் கிறான். பாரி போல் வாரி வழங்கும் வள்ளல் அவன் அல்வாறு வாரி வாரி வழங்குவதால் அரசக் கருவூலம் வற்றி விடுமே என்ற எண்ணத்திற்கே இடம் அளிக்காதவன். இடையறாது வழங்குவதால் வந்து குவியும் புகழ்ச் செல்வம் கண்டு செருக்குற்றுப் போகாதவன்; வாரி வழங்க வழங்க வழங்கும் பொருள் அளவு குறைந்து போகாது வழங்கத் தொடங்கிய போது எவ்வளவு வாரி வழங்குவனோ, அதே அளவான பொருள்களையே தொடர்ந்து வழங்குபவின் அத்துணைச் சிறந்த வள்ளல் பெருந்தகை அவன்' என்று செல்வக் கடுங்கோவின் கொடை வளப் பெருமையை எடுத்துரைத்தனர்.

அதுகேட்டார் கபிலர், செல்வக் கடுங்கோவின் கொடை வளப் புகழ், கபிலரின் உடல் தளர்ச்சி, உள்ளத் தளர்ச்சி களை ஒரு சேரத் துரத்தி விட்டு, அவரைச் செல்வக் கடுங்கோபால் துரத்தலாயிற்று. அவ்வளவே. அவரும் சேர் நாட்டுத் தலைநகர் நோக்கி விரைந்தார். ஆனால், செல்வக் கடுங்கோவை. ஆங்குக் காண இயலவில்லை. கபிலரைக் கண்ணுற்ற தலைநகர் மக்கள், செல்வக் கடுங்கோ , எப்போதும் தலைநகரே கதியாக இருந்து விடும் ஒடுங்கிய உள்ளம் உடையவனல்லன். போர் எனில் பூரிக்கும் தோள் உடையவன். ஆகவே எப்போதும் நாட்டு எல்லைக் கண் உள்ள பாசறைக் கண் போர் வீரர் புடை சூழவே இருப்பன். தலைநகர்க்கு எப்போது வருவான் எனக் கூறல் இயலாது இன்றே காண வேண்டின் ஆங்குச் சென்று காண்பீராக

எனறனா.