பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 23

அது கேட்ட புலவர், பாசறை நோக்கிப் புறப்பட்டு விட்டார். பாசறையை நெருங்க நெருங்கப் புலால் ந்ாற்றம் பொறுக்க இயலாதவாறு மூக்கைத் துளைக்கலாயிற்று புலால் நாறும் பாசறைக் கண், இப்புலால் நாற்றத்தையும் தாங்கிக் கொண்டு, கடுங்கோ எவ்வாறு தான் தங்கியிருக் கின்றனனேர் என எண்ணியவாறே சென்ற கபிலர், பகைவர் உடல்களுள் பல்கால் பாய்ந்து பாய்ந்து வெளிப்பட்டமை யால், வீரர் கை வாள்கள், காண்பவர் கண்கள் கூச்மளவு ஒளிப் பிழம்பாகியிருக்கவே, அவ்வா. கலை உற்று நோக்கி னார். வாள் முனை தோறும், அவை வெட்டி வீழ்த் திய படைவீரர்களின் குருதி கொட்டும் குடர் சிக்குண்டு தொங்குவது கண்டார், மேலும் சிறிது தொலைவு சென்றார். -

சேர நாட்டுக்கே சிறப்பளிக்கும் மலைநாட்டு வேழப் படை வரிசையாக நிற்பதையும், அவற்றின் நெடிய கூரிய கோடுகளிலும், பகைவர் உடலில் பாய்ந்து வெளிப்பட்ட போது சிக்குண்ட படை வீரர்களின் குடர்கள் குருதி கசியத் தொங்கிக் கொண்டிருப்பதையும் கண்ணுற்றார். புலால் நாற்றத்தின் காரணமும், செல்வக் கடுங்கோவின் கொற்றச் சிறப்பும் ஒரு சேரப் புலப்பட்டு விட்டன. வாள் முனையிலும் போர்க் களிறுகளின் கோடு முனையிலும் கிடந்து குருதி கசியும் பகை வீரர்களின் குடர்களிலிருந்தே வீசுகிறது இப்புலால் நாற்றம். பூ நாற்றத்தினும் இப்புலால் நாற்றத்தையே பெரிதும் விரும்பும் உள்ளம் வாய்க்கப் பெற்ற பேராண்மையாளன் செல்வக் கடுங்கோ, என்பதை உணர்ந்து, அவன், பாரி போல், பெருங் கொடையாளன் மட்டும் அல்லன்; அவனே போல் பெரு வீரனும் ஆவல் போலும் என்ற எண்ணச் சூழலில் சிக்கித் தன்னை மறந்து சிறிதே நின்றார்.

அப்போது, வெற்றி கொண்ட வீரன் புகழ்பாடும் களப் பாடலுக் கேற்பக் கொட்டும் வெற்றி முரசின் முழக்கம்