பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வரை போல் இஞ்சி

செல்வக் கடுங்கோ வாழியாதனின் வரையாது வழங்கும் கை வண்மை, பணியாத பகைவரைப் பாழ் செய்யும் கை வன்மைகளை அறிந்து, அவனைக் காண்ப் புறப்பட்டார் கபிலர். சேரநாட்டு எல்லைக்குட் புகுந்து, தலைநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இடையில், முல்லை வளமும், மருத வளமும் ஒரு சேரக் கொண்ட சிறுநாடு. பச்சைப் பசேலெனக் கண்ணுக்கெட்டும் வரையும் செழித்து வளர்ந்திருக்கும் முல்லைக்காட்டுப் புல்வெளியெங்கும், கறவை மாடுகள் வயிறார மேய்ந்து கொண்டிருந்தன. அக்காட்சி நலம் கண்டு களித்தவாறே சென்று கொண்டிருந் தார் கபில்ர். •.

செல்லச் செல்ல், நிலம் மேடு குறைந்து பள்ளமாகிக் கொண்டே போவது உணர்ந்தார். சிறிது தொலைவு சென்றதும், பச்சைக் கம்பளங்களையும், பொன்னிறக் கம்பளங்களையும், கலந்து கலந்து விரித்து வுைத்தாற்போல், பச்சைப் பசேலென்ற இளம் பயிர்களும், கதிர் முற்றிப் ப்ொன்னிறம் காட்டும் முதிர்ந்த பயிர்களும் நிறைந்த நெல் வயல்க்ளைக் கொண்ட் மருத நிலத்து நன்செய் காட்சி, அவர் கண்ணில் பட்டது: அக்காட்சி நலத்தைக் கண்ணுற்ற வாறே, முல்லை நிலம் விடுத்து மருதநிலம் @## நடைந்தார். - -

வயல்களில், நெற்பயிர் நன்கு செழித்து வளர்ந்து, காண்பவர் கண்களுக்குக் கதிர் தவிர்த்துத், தாள்புலப்