பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை - 37

கபிலரின் இக்கருத்தேர்ட்டத்தை உணர்ந்து கொண்ட ஊர்ப்பெரியவர்கள், ‘புலவர் பெருந்தகையே! தாங்கள் காணும் இப்பேரழிவை விளைவித்தவன் செல்வக்கடுங்கோ தான். அதற்கேற்ற ஆற்றலும், அது செய்யுங்கால், காலன் போலும் கொடுமையும் வாய்ந்தவன் என்பதெல்லாம் உண்மைதான். என்றாலும், கண்ணில்படும் நாடுகள் அனைத்தையும் அழித்து ஒழிக்கும் அறக் கொடியவன் அல்லன்; அவன் ஒரு பேரரசன்; முடியுடை மூவேந்தரில் ஒருவன். இந்நாடுகளை ஆள்பவரோ, சின்னம் சிறு குறு நிலத்தலைவர்கள். இவர்கள் அவன் தலைமையை ஏற்றுக் கொண்டு, அவன்முன், யானைகள், அங்குசத்தின் முன் தலை வணங்கிக் கிடப்பது போல், தலை வணங்கி நின்று, உரிய திறைப்பொருளைத் தப்பாது தந்துவிடுதலே முறை. அது செய்வார் நாடுகளை, அவன், அணுகவும் செய்யான். ஆ1இ! செய்யாது, தம் நாடோ வளங்கொழிக்கும் நாடு; அழிக்கலாகா அரண் கொண்டது என எண்ணி இறுமாத்து அவன் பகையைத் தேடிக்கொண்டால், அக்கணமே அவர் நாடு காடாகிப் போகும். எவராலும் கடக்க லா கா க் திண்மையும், அரிய ப்டைப்பொறிகள் அமைய ப் பெற்றதுமாகிய அரண் உடையேம் என்ற செருக்கால், ஒரு நாடு பணிந்திலது என்றால், நெற்றியில் பட்டமும், கழுத்தில் பொன்னரி மாலையும் சூட்டப் பெறுமளவு போர்த்திறனில் புகழ் பெற்ற களிற்றுப்படை, கார்மேகம் அணிவகுத்துச் செல்கிறதோ எனக் கருதுமாறு, கரிய தோலர்ல் ஆன கிடுகு ஏந்திய மறவர் படை, வாளும், வில்லும் ஏந்தி முன் வரிசையில் நிற்கும் பகைவர் படையைக், காற்றென விரைந்து ஓடி, ஊடறுத்து, நிலைகுலையப் பண்ணும். t - . . . .

கொய்து விட்ட பிடரி மயிரைக் கொண்ட குதிரைப் படைகளோடு கூடிய சேரநாட்டுப் பெரும்படை விரைந்து சென்று, அவ்வரனை சுற்றி வளைத்து, இல்லையாக்கி